கொரிய ஓபன் டென்னிஸ் தொடரில் பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியா (BEATRIZ HADDAD MAIA) சாம்பியன் பட்டம் வென்றார். சியோல் நகரில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை (DARIA KASATKINA) எதிர்கொண்டார். முதல் செட்டை கசட்கினா 6க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், சுதாரித்துக் கொண்ட பீட்ரிஸ் அடுத்த இரண்டு செட்களை 6க்கு 4, 6க்கு ஒன்று என்ற கணக்கில் தன்வசமாக்கி வெற்றி பெற்றார்.
இதன்மூலம் முதல்நிலை வீராங்கனையான டாரியா கசட்கினாவை வீழ்த்தி, பீட்ரிஸ் ஹடாத் மியா சாம்பியன் பட்டத்தை வென்றார். இது பீட்ரிஸ் ஹடாத் மியா பெறும் 4ஆவது சர்வதேச சாம்பியன் பட்டமாகும். முன்னதாக அரையிறுதியிலும் பீட்ரிஸ், ரஷ்யா வீராங்கனை வெரோனிகாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.