‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு

‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு
‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு
Published on

கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் ‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கப்பட்டதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையே நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்தது என்ற விதிமுறையின் படி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த விதிப்படி, ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால், அதிக பவுண்டரிகளை விளாசிய அணியே வெற்றி பெற்றதாகும். இதனை நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்திலேயே சச்சின் டெண்டுல்கர் அன்று ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நியூஸிலாந்து அணிக்கும், வில்லியம்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில், ‘பவுண்டரி ரூல்ஸ்’ முறையை ஐசிசி நீக்கியுள்ளது. இனிமேல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தாலும், ஒரு அணி அதிக ரன்கள் எடுத்து வெற்றி பெரும் வரை போட்டி தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சச்சின் டெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். “இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ, அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com