இந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்

இந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்
இந்திய அணியை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்: ஸ்ரீகாந்த்
Published on

இந்திய அணியை எதிர்கொள்ள மற்ற அணிகள் பயப்படுகின்றன என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 வது முறையாக தோற்கடித்தது. இதையடுத்து இந்திய அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இணையதளத்தில், இந்திய அணியை பாராட்டி பற்றி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ளார்.

அதில் அவர், ‘இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார். அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை விட முக்கியமானது கே.எல்.ராகுல் நின்று ஆடியது. தவான் இல்லாத நிலையில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ராகுல் எப்படி ஆடப் போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இறங்கி நூறு ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது சிறப்பானது. இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அருமையாக ஆடி ரன் குவித்தார்கள். இது அணி தொடர்ந்து முன்னேற உதவியது. பாகிஸ்தான் அணிக்கு முன், குல்தீப் யாதவ் பற்றி கவலை இருந்தது. அவர் ஃபார்மில் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், பாபர் ஆஸம் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பான பந்துவீச்சு. இந்திய அணியை விட, பாகிஸ்தான் அணிக்குத்தான் அதிக அழுத்தம் இருந்தது. 

விராத் கோலி தலைமையில்லான இப்போதைய இந்திய அணியை பார்க்கும்போது, 1970-களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி என் ஞாபகத் துக்கு வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும் எதிரணிகள் மனரீதியாக பாதிப்படைகிறார்கள். அவர்களுக்கு பயம் வந்துவிடுகிறது. இதனால் எப்படி ஆடப்போகிறோம் என்று முன் வைத்த காலை பின் வைத்துவிடுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com