சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியதை அடுத்து, தர வரிசையில் இந்திய அணி சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டி அணிகளின் தர வரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி 3 வது இடத்துக்கு சரிந்தது. ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திலும் இங்கிலாந்து அணி 4வது இடத்திலும், நியூசிலாந்து அணி 5வது இடத்திலும் தொடருகின்றன. சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 8வது இடத்தில் இருந்து 6வது இடத்தை பிடித்துள்ளது. அரை இறுதிக்கு முன்னேறிய பங்களாதேஷ் அணி 7வது இடத்தை பெற்றுள்ளது. இலங்கை அணி, பாகிஸ்தான் இருந்த இடமான 8வது இடத்துக்கு சறுக்கி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 77 புள்ளிகளுடன் 9வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் அணி 10வது இடத்திலும் உள்ளன.
பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் வார்னர், தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், இங்கிலாந்து வீரர் ஜோரூட் முறையே முதல் 4 இடத்தில் தொடர்கின்றனர். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல்முறையாக 5வது இடம் பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), ரபடா (தென் ஆப்பிரிக்கா), சுனில் நரேன் (வெஸ்ட் இண்டீஸ்), போல்ட் (நியூசிலாந்து) ஆகியோர் முதல் 6 இடங்களில் நீடிக்கின்றனர்.