சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தமிழக அணி- பரோடாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
12ஆவது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் 38 அணிகள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு அணியும், பரோடா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இத்தொடரில் தோல்வியே சந்திக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, தேவ்தார் தலைமையிலான பரோடாவை இறுதிப்போட்டியில் இன்றிரவு எதிர்கொள்கிறது.
சையத் முஷ்டக் அலி கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது தமிழ்நாடு அணி. அந்தப் போட்டியில் தமிழக வீரர் அருண் கார்த்திக் மிகச் சிறப்பாக விளையாடி 54 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கை பொருத்தவரை முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.