தினேஷ் கார்த்திக்கின் அபார சதத்தின் உதவியுடன் தியோதர் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய தினேஷ் கார்த்திக் 126 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் 55 ரன்கள் எடுத்தார்.தவல் குல்கர்னி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய பார்த்தீவ் படேல் தலைமையிலான இந்திய பி அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குர்கீரத் சிங் 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் ராஹில் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியிலும் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. நடந்துமுடிந்த விஜய் ஹசாரே மற்றும் தியோதர் கோப்பை ஆகிய 2 தொடர்களில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 3 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 854 ரன்கள் குவித்துள்ளார்.