நடப்பு ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிய நிலையில், முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
எலிமினேட்டரில் லக்னோவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் தகுதிப்போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இன்று (மே 26) அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 28ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னையை எதிர்கொள்ளும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் மும்பை அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்...
தொடக்க வரிசை :
கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் தொடக்க பேட்ஸ்மேன்களாக இறங்குவது உறுதி. இஷான் கிஷன் பெரியளவில் ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் ப்ளோ-ஆப் சுற்றுக்கு வருவதில் போதுமான பங்களிப்பு செய்துள்ளார். இஷான் இந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடி 454 ரன்கள் எடுத்துள்ளார்.
மிடில் ஆர்டர்
சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் பேட் செய்வார், அதைத் தொடர்ந்து திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா ஆகியோர் களமிறங்குவார்கள். மும்பை அணியில் இளம் மற்றும் மூத்த வீரர்களின் கலவை கனக்கச்சிதமாக அமைந்துள்ளது. இம்பாக்ட் ப்ளேயராக விஷ்ணு வினோத் பயன்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது. ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சூப்பர் ஃபார்மில் உள்ளார். ஆகவே அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார். மேலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பொறுப்பும் அவருக்கு இருக்கும்.
பந்துவீச்சு
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் கடைசியாக விளையாடியது ஏப்ரல் 25ஆம் தேதி. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்திலும் அவர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை என தெரிகிறது.
ஆகாஷ் மத்வால், கிறிஸ் ஜோர்டான், கேமரூன் கிரீன் ஆகியோர் மும்பை அணியின் பந்து வீச்சு துறைக்கு உத்வேகம் அளித்து வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளார்.
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், விருத்திக் ஷோகீன் அல்லது நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியுஷ் சாவ்லா, பெரன்டோர்ப், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா.