India Head Coach|காலதாமதம் ஆவது ஏன்? 2 விஷயங்களை பிசிசிஐயிடம் முன்வைத்த கவுதம் கம்பீர்!

தலைமைப் பயிற்சியாளர் பதவி நியமனத்தில் தாமதம் ஆவது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கம்பீர், பிசிசிஐ
கம்பீர், பிசிசிஐஎக்ஸ் தளம்
Published on

நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற உற்சாகத்துடன், தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. அந்தப் பதவிக்காக நடைபெற்ற நேர்காணலில், கவுதம் கம்பீருக்குப் போட்டியாக முன்னாள் இந்திய வீரரான W.V.ராமனும் கலந்துகொண்டது பேசுபொருளானது. என்றாலும், கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ முன்னுரிமை அளிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராகத் கம்பீர் தேர்வு செய்யப்படுபவார் எனக் கூறப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் பயிற்சியாளராக அனுப்பப்பட்டு உள்ளார். என்றாலும் தலைமைப் பயிற்சியாளர் பதவி நியமனத்தில் தாமதம் ஆவது ஏன் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்எக்ஸ் தளம்

அந்த வகையில், கவுதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்க ரூ.12 கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால்தான் காலதாமதம் ஆவதாகவும், அவர் கேட்கும் சம்பளத்திற்கு பிசிசிஐ இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 121 பேர் பலியான ஹத்ராஸ் சம்பவம்| 855 பக்கங்கள் கொண்ட அறிக்கை.. வெளியான புது தகவல்!

கம்பீர், பிசிசிஐ
Head Coach|அடுத்த ஜிம்பாப்வே தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண்; பிசிசிஐக்கு கண்டிஷன் போட்ட கவுதம் கம்பீர்!

அதாவது, இதற்கு முன்பிருந்த ராகுல் டிராவிட் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், இது வீரர்கள் வாங்கும் ஆண்டு சம்பளத்தைவிட அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்தச் சம்பளத்தைவிட, கூடுதலாக (ரூ.15 கோடி) தமக்கு வேண்டும் என கம்பீர் கேட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், ‘தாம் பதவியேற்றால் தமக்கு ஸ்பெஷல் பவர் வேண்டும் எனவும், அதாவது, இந்திய அணியின் அடுத்த கேப்டன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தாம் முடிவு செய்ய அதிகாரம் வேண்டும் எனவும், அணியில் தாம் எடுக்கப்போகும் மாற்றத்திற்கு பிசிசிஐ நிர்வாகிகள் எந்த தலையீடும் செய்யக்கூடாது என்றும் கம்பீர் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கெளதம் கம்பீர்
கெளதம் கம்பீர்ட்விட்டர்

இதனால்தான் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க அவர் காலதாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. அவர் வைத்துள்ள கோரிக்கையை, பிசிசிஐயும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கம்பீரின் விசயத்தில் பிசிசிஐ தலையாட்டும் பட்சத்தில் அவர் விரைவில் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க:புதின் - மோடி சந்திப்பு.. கடுமையாகச் சாடிய உக்ரைன் அதிபர்!

கம்பீர், பிசிசிஐ
Head Coach: நேர்காணலில் கம்பீரை ஓரங்கட்டிய முன்.IND வீரர்! யாரும் எதிர்ப்பார்க்காத Twist! யார் அவர்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com