3வது டி20: ஹர்சித் ரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை? IPL காரணமா? கம்பீரை விளாசும் நெட்டிசன்கள்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஹர்சித் ரானாவுக்கு அறிமுகம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், அவரில்லாமல் இந்திய அணி சென்றுள்ளது.
ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்
ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்web
Published on

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையெயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.

ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்
16 பந்துக்கு 39ரன்.. சூர்யகுமாருக்கு போட்டியாக அடித்த பாண்டியா! வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!

கேப் பெற்ற நிதிஷ்- மயங்க் யாதவ்.. ஹர்சித் ரானாவுக்கு வாய்ப்பில்லை..

டி20 வடிவத்திலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிந்திர ஜடேஜா முதலிய மூத்தவீரர்கள் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், புதிய வீரர்களுக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் மயங்க் யாதவ் இருவரும் தங்களுடைய முதல் டி20 அறிமுகத்தை பெற்றனர். இவர்களை தொடர்ந்து மற்றொரு அன்கேப்டு வீரரான ஹர்சித் ரானா இன்று தன்னுடைய முதல் அறிமுகத்தை பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 3வது போட்டிக்கான இந்திய அணியில் ஹர்சித் ரானாவின் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு வைரல் இன்ஃபெக்சன் இருப்பதால் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது போட்டிக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்

ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்
டிஎஸ்பியாக பொறுப்பேற்ற கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்.. தெலுங்கானா அரசு கௌரவம்!

ஐபிஎல் காரணமா? கவுதம் கம்பீரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

நிதிஷ் குமார் மற்றும் மயங்க் யாதவ் இருவரும் இந்திய அணிக்காக அறிமுகம் பெற்ற நிலையில், ஹர்சித் ரானா மட்டும் அறிமுகம் பெறாத நிலையில் ஐபிஎல்-தான் காரணம் என்றும், கவுதம் கம்பீர் இந்திய அணியை விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக செயல்படுகிறார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஐபிஎல் ஏல தக்கவைப்பு விதிமுறைகளின் படி, சர்வதேச அணியில் விளையாடாத குறைந்தபட்சம் ஒரு அன்கேப்டு வீரரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஒருவேளை ஹர்சித் ரானா இன்றைய போட்டியில் அறிமுகம் பெற்றிருந்தால், கொல்கத்தா அணியில் விளையாடும் அவரை அவ்வணியால் அன்கேப்டு வீரராக தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஏலத்தில் விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

தற்போது இந்திய அணியின் தொப்பியை பெறாத நிலையில், கொல்கத்தா அணியால் அவரை அன்கேப்டு வீரராக குறைவான விலைக்கு தக்கவைத்துக்கொள்ள முடியும். கடந்த 2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய வேகத்தாலும், வேரியேசனாலும் அனைவரையும் ஈர்த்திருந்தார் ஹர்சித் ரானா.

ஹர்சித் ரானா - கவுதம் கம்பீர்
“இந்தியாவை போல இங்கிலாந்து அணி கூட வெல்லவில்லை..!” - முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழாரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com