டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்
கடந்த சீசனுக்கு முன்பாக பல டிரேட்களை அரங்கேற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இந்த முறை அப்படி எதுவுமே செய்யவில்லை.
ரிலீஸ் செய்த வீரர்கள்
இந்த ஏலத்துக்கு முன்பு அதிகபட்சமாக 11 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது நைட் ரைடர்ஸ். கடந்த சீசனுக்கு முன்பு பெரும் தொகைக்கு டிரேட் செய்திருந்த ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன் ஆகியோரை ரிலீஸ் செய்துவிட்டது அந்த அணி. அதுபோக, அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட முன்னணி வீரர்கள் உமேஷ் யாதவ், டேவிட் வீஸா, ஷகிப் அல் ஹசன், டிம் சௌத்தி ஆகியோரையும் வெளியேற்றியிருக்கிறார்கள். தமிழக வீரர் என் ஜெகதீசனையும் கழட்டிவிட்டிருக்கிறது கேகேஆர்.
எத்தனை வீரர்கள் தேவை? எவ்வளவு இருக்கிறது?
ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 11
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 13
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 12
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 4
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 32.7 கோடி ரூபாய்
பிளேயிங் லெவன் எப்படி இருக்கிறது
1. ரஹ்மானுல்லா குர்பாஸ்*
2. வெங்கடேஷ் ஐயர்
3. ஷ்ரேயாஸ் ஐயர்
4. நித்திஷ் ராணா
5. ஆண்ட்ரே ரஸல்*
6. ரிங்கு சிங்
7.
8. சுனில் நரைன்*
9.
10. வைபவ் அரோரா / ஹர்திஷ் ராணா
11. வருண் சக்ரவர்த்தி
இம்பேக்ட் பிளேயர்: சூயஸ் ஷர்மா
எந்தெந்த வீரர்களை அந்த அணி டார்கெட் செய்யும்?
இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிரப்பவேண்டிய இடங்கள் நிறையவே இருக்கின்றன. மேலே பிளேயிங் லெவனைப் பார்த்தாலே அது புரியும். 2 ஸ்லாட்களுக்கு சரியான ஆள்கள் இல்லை. அதுபோக, நிச்சயம் அந்த அணி அந்த 10வது ஸ்லாட்டையும் பலப்படுத்த நினைக்கும். அதனால், குறைந்தபட்சம் பிளேயிங் லெவனில் விளையாடியக்கூடிய 3 வீரர்களுக்கு பெரும் தொகைக்கு அந்த அணி போட்டி போடும். 32.7 கோடி ரூபாய் இருப்பதால் நிச்சயம் சில ஸ்டார் வீரர்கள் நைட்ரைடர்ஸ் அணிக்கு இம்முறை வர வாய்ப்புண்டு.
அந்த அணி நிச்சயம் மிட்செல் ஸ்டார்க் அல்லது பேட் கம்மின்ஸ் இருவரில் ஒருவரை டார்கெட் செய்யும். ஏற்கெனவே ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி இவர்கள் இருவரையுமே வாங்கியிருக்கிறது. ஸ்டார்க் தான் துருதிருஷ்டவசமாக விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வேகப்பந்துவீச்சை தலைமை தாங்கக்கூடிய ஒரு சீனியர் வீரருக்கு நிச்சயம் அவர்கள் போட்டியிடுவார்கள்.
ஷர்துல் தாக்கூர், ஹர்ஷல் படேல் ஆகியோர் இரண்டாவது செட்டிலேயே வந்துவிடுவார்கள். டெத் பௌலிங்கை பலப்படுத்த ஹர்ஷல் படேலை அந்த அணி நிச்சயம் டார்கெட் செய்யும். ஒருவேளை அவரை வாங்க முடியாமல் போனால், குறைவான தொகைக்கு மீண்டும் ஷர்துலை வாங்க முயற்சி செய்யலாம். அந்த இரண்டாவது செட்டில் ஹர்ஷல், ஷர்துல், கம்மின்ஸ் ஆகியோரில் இருவரை அந்த அணி டார்கெட் செய்யும். கம்மின்ஸ் இல்லாவிட்டால் கொட்சியாவை முயற்சிக்கலாம். இவர்கள் எல்லோருக்குமே நிச்சயம் பெரும் போட்டி இருக்கும்.
இந்திய பௌலர்கள் ஒட்டுமொத்தமாகவே அணியில் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்பதால் கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா ஆகியோரையும் முயற்சி செய்யலாம். 7வது வீரருக்கான ஸ்லாட்டுக்கு ஷாரூக் கானை அந்த அணி வாங்க முயற்சி செய்யும். ஒருவேளை, நட்சத்திர வெளிநாட்டு பௌலரை அந்த அணி வாங்காமல் விட்டால், அந்த 7ம் நம்பர் ஸ்லாட்டுக்கு வெளிநாட்டு வீரரை வாங்கலாம். கூடுதல் விக்கெட் கீப்பர் ஆப்ஷன் வேண்டும் என்பதால் ஜாஷ் இங்லிஸ், சேம் பில்லிங்ஸ் ஆகியோரை அந்த அணி வாங்கக்கூடும். அப்படி வாங்கினால் ஓப்பனிங் ஸ்லாட்டில் குர்பாஸுக்கு பதிலாக ஜேசன் ராயை அவர்கள் களமிறக்கலாம்.
அதனால் காம்பினேஷனுக்கு ஏற்ப அவர்கள் வீரர்களை தேர்வு செய்யலாம். மன்தீப் சிங், ஜெகதீசன் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை வெளியேற்றியிருப்பதால் அந்த இடங்களை இந்திய பேட்ஸ்மேன்களை வைத்து நிரப்பப் பார்ப்பார்கள். வழக்கம்போல் இந்த முறையும் ரஸலுக்கு ஒரு பேக் அப் வாங்க நினைப்பார்கள். ஜேம்ஸ் நீஷம் போன்ற ஒரு பிளேயரை அந்த இடத்துக்கு நைட் ரைடர்ஸ் வாங்கக்கூடும்.