IPL 2025 Retention List: சிஎஸ்கே முதல் MI வரை.. 10அணிகளில் தக்கவைக்கப்படுவது யார் யார்? எத்தனை கோடி?

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவிருக்கின்றன. யார் யாருக்கு எத்தனை கோடி கிடைக்கவிருக்கிறது, எந்த வீரர்கள் எல்லாம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது விரிவாக பார்க்கலாம்..
பண்ட் - ராகுல் - தோனி - ரோகித்
பண்ட் - ராகுல் - தோனி - ரோகித் PT
Published on

இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுவது, ஐபிஎல் தொடர். கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடத்தப்படும் இந்தத் தொடரின் அடுத்த சீசன் (18ஆவது சீசன்) 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. எனினும், இதுகுறித்த பேச்சுகள் இப்போதே சூடுபிடித்துள்ளன. அதற்குக் காரணம், விரைவில் ஐபிஎல் அணிக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறைகள், ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிமுறைகளின் படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம், 6 வீரர்களுக்கான RTM-ம் (ஏலத்தின் போது) பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் இந்த ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

TATA
TATA

தக்கவைப்பு முறையில் 6 வீரர்களுக்கான தொகை:

* முதல் Retention பிளேயர் - ரூ.18 கோடி

* 2வது Retention பிளேயர் - ரூ.14 கோடி

* 3வது Retention பிளேயர் - ரூ.11 கோடி

* 4வது Retention பிளேயர் - ரூ.18 கோடி

* 5வது Retention பிளேயர் - ரூ.14 கோடி

* அன்கேப்டு வீரருக்கு - ரூ.4 கோடி

இந்நிலையில், ஏலத்திற்கு முன்பு ஒவ்வோர் அணியும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை நாளைக்குள் (அக்.31) வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

2025 ipl
2025 ipl

அந்தவகையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்க வாய்ப்புகள் இருக்கிறது என்ற விபரத்தை கீழே பார்க்கலாம்..

சென்னை சூப்பர் கிங்ஸ் - CSK

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாம்பியன் அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன்னுடைய சமீபத்திய எக்ஸ் தள பக்கத்தில் 5 வீரர்களை தக்கவைக்கும் விதமாக பதிவொன்றை பதிவிட்டுள்ளது. அதன்படி, மகேந்திர சிங் தோனியை மீண்டும் தக்கவைக்கும் வகையில் ஹெலிகாப்டர் எமோஜியை பயன்படுத்தி க்ளூ கொடுத்துள்ளது.

* ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) - ரூ.18 கோடி

* ரவிந்திர ஜடேஜா - ரூ. 14 கோடி

* பதிரானா - ரூ.11 கோடி

* எம்எஸ் தோனி - ரூ. 4 கோடி (அன்கேப்டு விதிமுறையின் படி)

தோனி
தோனி

மீதமிருக்கும் 5வது வீரராக ஷிவம் துபே அல்லது டெவான் கான்வேவை தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரச்சின் ரவிந்திரா RTM மூலம் தக்கவைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேவேளையில் சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஸ்பாண்டே போன்ற வீரர்கள் எப்படி அணிக்குள் தக்கவைக்கப்பட போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்துவருகிறது.

மும்பை இந்தியன்ஸ் - MI

ஐபிஎல் மெகா ஏலத்திற்கான பெரிய பார்வை மும்பை இந்தியன்ஸ் அணி மீதே உள்ளது. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா கேப்டன்சி விவகாரத்திற்கு பிறகு ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது. அதேநேரத்தில் ரோகித் சர்மாவை வெளியிட மும்பை இந்தியன்ஸ் அணி விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ரோகித் சர்மா அவராகவே அணியிலிருந்து வெளியேற நினைத்தால், 2025 ஐபிஎல் தொடரானது பல திருப்பங்களை சந்திக்கும்.

rohit sharma
rohit sharma

* ஹர்திக் பாண்டியா (கேப்டன்) - ரூ.18 கோடி

* ரோகித் சர்மா - ரூ.14 கோடி

* ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி

* சூர்யகுமார் யாதவ் - ரூ.14 கோடி

* நேஹல் வதேரா - ரூ. 4 கோடி (அன்கேப்டு விதிமுறையின் படி)

ஒருவேளை ரோகித் சர்மா வெளியேறினால், அவருக்கான மாற்றுவீரராக ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் தேடும்.

ஆர்சிபி - RCB

ஆர்சிபி அணியை பொறுத்தவரையில் அந்த அணியில் 4 வீரர்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டு, மீதமிருக்கும் அனைத்து வீரர்களும் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேப்டனாக இருந்த டூ பிளெஸி கூட வெளியேற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆர்சிபி அணி மாற்று கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட்டை குறிவைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்
விராட் கோலி - க்ளென் மேக்ஸ்வெல்web

* விராட் கோலி - ரூ.18 கோடி

* வில் ஜாக்ஸ் - ரூ. 14 கோடி

* முகமது சிராஜ் - ரூ.11 கோடி

* யஸ் தயாள் - ரூ. 4 கோடி (அன்கேப்டு விதிமுறையின் படி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - KKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சாம்பியனாக இருந்தாலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்கும் முயற்சியில் இல்லை என்று தெரிகிறது. அவருக்கான மாற்று கேப்டனாக ரோகித் சர்மாவை எதிர்ப்பார்ப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த வீரரை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது ஸ்ரேயாஸ் ஐயரையே தக்கவைப்பார்களா என்று நாளை தெரிந்துவிடும்.

2024 ipl champion
2024 ipl champion

* சுனில் நரைன் - ரூ.18 கோடி

* ஆண்ட்ரே ரஸ்ஸல் - ரூ. 14 கோடி

* வருண் சக்கரவர்த்தி - ரூ. 11 கோடி

* ரிங்கு சிங் - ரூ. 8 கோடி

* ஹர்சித் ரானா - ரூ. 4 கோடி (அன்கேப்டு விதிமுறையின் படி)

ரின்கு சிங் ஏலத்தில் விடப்பட்டு RTM மூலம் தக்கவைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றது. இளம் வீரர் ரகுவன்சி அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் - SRH

சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரையில் மூன்று வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்கும் எண்ணத்தில் இருந்துவருகிறது. அந்த 3 வீரர்களுமே அணிக்கான முக்கிய வீரர்களாக இருந்துவருகின்றனர்.

SRH skipper Pat Cummins with coach Daniel Vettori
SRH skipper Pat Cummins with coach Daniel VettoriSwapan Mahapatra

* பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி

* ஹென்ரிச் க்ளாசன் - ரூ.14 கோடி

* அபிஷேக் சர்மா - ரூ.11 கோடி

* டிராவிஸ் ஹெட் - ரூ. 8 கோடி

நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நடராஜன் போன்ற வீரர்கள் RTM மூலம் தக்கவைக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ் - GT

டைட்டன்ஸ் அணி மிகப்பெரிய சிக்கலுக்குள் இருந்துவருகிறது, முகமது ஷமி காயத்தால் விளையாடமாட்டார் என்பதால் அவரை தக்கவைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் கேன் வில்லியம்சனும் வெளியேற்றப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

Shubman Gill
Shubman GillKunal Patil

* சுப்மன் கில் (கேப்டன்) - ரூ.18 கோடி

* ரசீத் கான் - ரூ. 18 கோடி

* சாய் சுதர்சன் - ரூ. 11 கோடி

* ராகுல் திவேத்தியா - ரூ.4 கோடி ( அன்கேப்டு விதிமுறையின் படி)

டேவிட் மில்லர் மற்றும் சாருக் கான் முதலிய வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டு RTM மூலம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - LSG

LSG அணியானது அவர்களுடைய கேப்டனான கேஎல் ராகுலை தக்கவைக்கும் எண்ணத்தில் இல்லை என்பது கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத குறைதான். அவர்களுடைய அணியில் பிரதான வீரராக நிக்கோலஸ் பூரனும், அந்த அணி அவரை சுற்றியே கட்டமைக்கப்படவிருக்கிறது.

Lucknow Super Giants
Lucknow Super GiantsFacebook

* நிக்கோலஸ் பூரன் - ரூ.18 கோடி

* மயங்க் யாதவ் - ரூ.14 கோடி

* மோஷின் கான் - ரூ.11 கோடி

* ரவி பிஸ்னோய் - ரூ. 8 கோடி

ஆயுஸ் பதோனி RTM மூலம் தக்கவைக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - RR

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய பிரதான அணியை கலைத்துவிட்டு 3 வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்x

* சஞ்சு சாம்சன் (கேப்டன்) - ரூ.18 கோடி

* யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ. 14 கோடி

* ரியான் பராக் - ரூ. 11 கோடி

ஜோஸ் பட்லர் ஏலத்தில் விடப்பட்டு RTM மூலம் தக்கவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் - DC

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், சமீபத்தில் “நான் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தால் எவ்வளவு தொகைக்கு செல்வேன்” என்று போட்டிருந்த பதிவு அவர் டெல்லி அணியை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ரிஷப் பண்ட் - ரூ. 18 கோடி

* அக்சர் பட்டேல் - ரூ. 14 கோடி

* குல்தீப் யாதவ் - ரூ.11 கோடி

* டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.14 கோடி

* அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி (அன்கேப்டு விதிமுறையின் படி)

pant
pant

ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஜாக் ப்ரேசர் மெக்கர்க் RTM மூலம் தக்கவைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் - PBKS

கடந்த ஐபிஎல்லில் சிறந்த காம்பினேஷனை கொண்டிருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் பெரிதாக இம்பேக்ட்டை கொடுக்க முடியவில்லை. அந்தவகையில் அந்த அணி பெரும்பாலான வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை எடுக்கும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

shashank singh
shashank singhcricinfo

* அர்ஷ்தீப் சிங் - ரூ.14 கோடி

* ஷசாங் சிங் - ரூ. 4 கோடி - அன்கேப்டு வீரர்

* அஷுதோஸ் சர்மா - ரூ. 4 கோடி - அன்கேப்டு வீரர்

கவனத்தை பெறவிருக்கும் மாற்றங்கள்..

* ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறுவது

* கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வருவது

* தோனி அன்கேப்டு வீரராக தக்கவைக்கப்படுவது

* பஞ்சாப் கிங்ஸின் முதல்ல இருந்து கலைங்க மொமண்ட்

* ஆர்சிபி அணியின் ரிடென்சன் அலப்பறைகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com