CSKvsGT | இன்று இவர்கள் தான் சிஎஸ்கே-வின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!
சென்னை அணி இந்த சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் - டேவான் கான்வே ஆகியோரை குறிப்பிடலாம். ஏனெனில் இதுவரையில் இன்னிங்ஸின் தொடக்கத்தில் SET ஆக சில பந்துகளை எடுத்துக் கொண்டு, அதன் பிறகு இருவரும் காட்டும் அதிரடி சென்னை அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவிகரமாக இவர்களின் காம்போ அமைந்துள்ளது.
14 இன்னிங்ஸில் டேவான் கான்வே 6 அரைசதம் உட்பட 625 ரன்னும், ருதுராஜ் கெய்க்வாட் 4 அரைசதம் உட்பட 564 ரன்னும் எடுத்துள்ளனர். மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை சிதறடித்து ரன் குவிப்பில் வேகம் காட்டும் அதிரடி நாயகன் ஷிவம் துபே 14 இன்னிங்ஸில் 33 சிக்ஸர்கள் பறக்கவிட்டு, 3 அரைசதம் உட்பட 386 ரன் அடித்துள்ளார்.
நடப்பு சீசனில் MOST UNDERRATED BOWLER என்று ஆல் ரவுண்டர் ஜடேஜாவை குறிப்பிடலாம்... முக்கிய தருணங்களில் விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளார். உதாரணமாக மும்பை அணிக்கு எதிரான மோதலை சொல்லலாம். சூப்பர் ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியதே சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
பந்து வீச்சில் தீபக் சஹார் நம்பிக்கை தருகிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், பவர் பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை தடுமாறச் செய்கிறார். டெத் ஓவர்களில் சென்னை அணி மலை போல் நம்பி இருப்பது பேபி மலிங்கா பதிரனாவை தான்.. அவரது SLING ACTION பவுலிங் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.