வரிசையாக 4 போட்டிகளில் தோற்ற RR! RCB-க்கு எதிராக வெற்றிபெற காரணம் யார்? அவர் முன்பே இருந்திருந்தால்?

5 போட்டிகளாக வெற்றிக்கு திரும்ப முடியாமல் தடுமாறிவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குறைத்து மதிப்பிட்டதால் தான் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது என்று கூறினாலும், தோல்வியிலிருந்து வெற்றிக்கு திரும்ப ஒருவீரர் மட்டுமே முக்கியமான காரணமாக இருந்தார்.
RR vs RCB
RR vs RCBCricinfo
Published on

2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை தட்டிச்சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு பிறகு 16 வருடங்களாக கோப்பை வெல்லும் கனவை தோள்மீது சுமந்துவருகிறது.

அதற்கடுத்த பல சீசன்களில் நல்ல அணியாக தெரிந்த போதும் அவர்களால் கோப்பையை மட்டும் வெல்லமுடியாமலே போனது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு நல்ல அணியாக உருவெடுத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையில் கோப்பை வெல்லக்கூடிய ஒரு அணியாக வலம்வருகிறது.

RR 2008 IPL Champions
RR 2008 IPL Champions

ஆரம்பத்தில் எந்த அணியாலும் வீழ்த்தவே முடியாது எனும் நிலையில் அபாரமாக செயல்பட்டுவந்த அந்த அணி, தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த பிறகு “இவங்க எப்பவும் இரண்டாவது பாதில சோக்கர்ஸ் தான், இந்த அணி எல்லாம் கோப்பை வெல்லமாட்டாங்க” என்ற கடுமையான விமர்சனத்தை பெற்றது.

RR
RR

இந்நிலையில் 6 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றது மட்டுமில்லாமல், நடப்பு சாம்பியன் அணியான சிஎஸ்கேவை வீழ்த்தி பெரிய பலத்தோடு திரும்பிவந்த ஆர்சிபி அணியை எப்படி RR அணி தோற்கடித்தது என்றால் சிலருக்கு இது ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தியது. ஜோஸ் பட்லர் சென்றபிறகு சரியான மேட்ச் வின்னர் இல்லாமல் தடுமாறி வந்த RR அணி, ஒரேஒரு வீரரின் வருகைக்கு பிறகுதான் வெற்றிக்கு திரும்பியுள்ளது.

RR vs RCB
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டீங்க.. தொடரும் 17 வருட சோகக்கதை! கோலியை சொல்லி வீழ்த்திய அஸ்வின்!

அஸ்வினா? வெற்றிக்கு யார் முக்கிய காரணம்?

ஒரே ஓவரில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். ஆனால் ஆட்டநாயகன் விருதை அஸ்வின் தட்டிச்சென்றாலும், போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது ஷிம்ரன் ஹெட்மயர் என்ற ஃபினிசிங் வீரர் தான்.

அஸ்வின்
அஸ்வின்

மே 2-ம் தேதியன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற ராஜஸ்தான் அணி அதற்குபிறகு வெற்றியை பார்க்கவே இல்லை. SRH அணியுடனான போட்டிக்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்து ஷிம்ரன் ஹெட்மயர், ஆர்சிபி அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு பிறகு பங்கேற்றார்.

முக்கியமான நேரத்தில் அழுத்தம் அதிகமாக நல்ல ஃபார்மில் இருக்கும் கேப்டன் சஞ்சு சாம்சன் தன்னுடைய விக்கெட்டை தானாகவே பறிகொடுத்து வெளியேறிய போது, ஆர்சிபி அணியின் கைகளே போட்டியில் ஓங்கியிருந்தது. ஆனால் முக்கியமான கட்டத்தில் அழுத்தத்தை சரியாக கையாண்ட ஹெட்மயர், இறங்கியதிலிருந்தே 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடி ஆர்சிபி அணியின் தலைமேல் அழுத்தத்தை திருப்பிவிட்டார்.

Shimron Hetmyer
Shimron Hetmyer

அந்த இடத்தில் எதிர்முனையில் இருந்த ரியான் பாராக்கின் மீதும் அதிகமான அழுத்தம் இருந்தது. எந்த அணி அழுத்தத்தை சரியாக கையாள்கிறதோ அந்த அணி வெற்றியின் பக்கம் செல்லும் என்ற நிலையில், ஷிம்ரன் ஹெட்மயர் ஆர்சிபி அணியின் கையிலிருந்த போட்டியை ராஜஸ்தான் அணியின் கைகளுக்கு எடுத்துச்சென்றார். கடந்த 4 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தவறவிட்ட இடம் இதுஒன்றாக மட்டுமே இருந்தது. ஒருவேளை ஹெட்மயரும் அவுட்டாகி சென்றிருந்தால், எலிமினேட்டரில் ஆர்சிபி அணி வெற்றியை தட்டிச்சென்றிருக்கும். ஒரேயொரு வீரர் அணிக்குள் வந்தது ஒட்டுமொத்த அணியையும் வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளது. அதேபோல், பவெலின் பினிஷிங்கும் முக்கியமான பங்கு வகித்தது.

RR vs RCB
”RCB-ஐ விட்டு விராட் கோலி வெளியேறவேண்டும்..”! ரொனால்டோ, மெஸ்ஸியை உதாரணம் கூறிய பீட்டர்சன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com