ஐபிஎல் Play Off சுற்று : கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி CSK-க்கு பாதிப்பா? காத்திருக்கும் சவால்கள்!

குஜராத் டைட்டன்ஸ் 16, சிஎஸ்கே 15, மும்பை 14, லக்னோ 13 என புள்ளிப்பட்டியலுடன் வரிசைகட்டி நிற்கினறன. இந்நிலையில் கொல்கத்தா அணியுடன் நேற்று பெற்ற தோல்வி, சிஎஸ்கேவுக்கு சிக்கலை ஏற்பட்டுத்தியுள்ளது.
CSK
CSKR Senthil Kumar
Published on

சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சிஎஸ்கே-வுக்கு சிக்கலாகியிருக்கிறது.

சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்போதிருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தேவையான 4 இடங்களில், பட்டியலில் இருக்கும் எந்த அணியும் தகுதி பெறலாம்.

சிஎஸ்கே
சிஎஸ்கேR Senthil Kumar

புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரை, தற்போது குஜராத் டைட்டன்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு பின்னே சிஎஸ்கே 15, மும்பை 14, லக்னோ 13 என வரிசைகட்டி நிற்கினறன.

இப்படியான நிலையில் சிஎஸ்கே பெற்றிருக்கும் இந்த தோல்வி, அணிக்கு சிக்கலை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்தத் தோல்வி மும்பைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லலாம்; கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும் சொல்லலாம். (தற்போது கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது).

இப்போது சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்...

சிஎஸ்கே அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதற்கான 14 புள்ளிகளுடன், மழையால் கைவிடப்பட்ட ஒரு போட்டியின் ஒரு புள்ளியும் சேர்த்து 15 புள்ளிகளுடன் 2 வது இடத்தில் நீடிக்கிறது சிஎஸ்கே.

Dhoni
Dhoni@ChennaiIPL

சிஎஸ்கே நெட் ரன்ரேட் 0.493 என்று இருந்தது. கொல்கத்தாவுடனான தோல்வியால் நெட் ரன்ரேட் 0.381 ஆகக் குறைந்துள்ளது. சிஎஸ்கே தன்னுடைய அடுத்த ஆட்டத்தில் டெல்லியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் கட்டாயமாக வெற்றிப்பெற்றால் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்! இல்லையென்றால் சிக்கல் நீடிக்கும்.

அடுத்தடுத்து நிற்கும் லக்னோ, மும்பை!

புள்ளிகள் பட்டியலின்படி லக்னோ அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் உள்ளன. லக்னோ அணி அடுத்த ஒரு போட்டியில் வென்றால் 15 புள்ளிகளுடன் சிஎஸ்கேவுக்கு இணையாக வரும். தற்போது அந்த அணியின் நெட் ரன்ரேட் 0.309 ஆக இருக்கிறது. ஆதலால், அடுத்த ஒரே ஒரு வெற்றியில் லக்னோ அணி, நெட் ரன்ரேட்டில் சிஎஸ்கேவை முந்திவிடக்கூடும். மேலும் லக்னோ அணி அடுத்த இரு ஆட்டங்களில் வென்றால், 17 புள்ளிகள் பெற்று சிஎஸ்கேவுக்கு மீண்டும் போட்டியாக வரும். அப்போது இரு அணிகளுக்கும் இடையே நெட் ரன்ரேட் பெரிய ட்விஸ்டை தரும்.

Dhoni
Dhoni@ChennaiIPL

இதேபோல மும்பைக்கு அடுத்து இரு போட்டிகள் உள்ளன. ஒரு போட்டி லக்னோ அணியுடனும் கடைசி லீக் சன்ரைசர்ஸ் அணியுடனும் மோதுகிறது. இரு ஆட்டங்களில் மும்பை வென்றால், தற்போது 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை, 18 புள்ளிகள் பெற்று, சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை மும்பை ஒரு போட்டியில் தோற்று, ஒன்றில் வென்றால், 16 புள்ளிகளுடன் இருக்கும்.

இப்படியாக மும்பை, லக்னோ அணிகளால் சிஎஸ்கே பிளே ஆப் சுற்றில் 2வது இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சிஎஸ்கே அணி டெல்லியை தனது கடைசிப் போட்டியில் துவம்சம் செய்ய வேண்டும், நெட் ரன்ரேட்டையும் உயர்த்த வேண்டும்.

ஆக மொத்தம் எப்ப வேணும்னாலும் எதுவேனாலும் நடக்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com