WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 ரன்களை விளாசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
நிக்கோலஸ் பூரன்
நிக்கோலஸ் பூரன்எக்ஸ் தளம்
Published on

20 அணிகள் பங்கேற்றுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

1) 6 பந்துகளில் 36 ரன்கள்!

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 6 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். ஆப்கானிஸ்தான் அணி வீரர் அசமத்துல்லா ஓமர்சாய் 4வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் அபார சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் பவுண்டரி விளாசப்பட்டது. ஆனால் அது நடுவரால் நோ-பால் என்று அறிவிக்கப்பட, மீண்டும் வீசிய பந்து ஒய்டு மற்றும் பவுண்டரிக்குச் சென்றது.

இதனால் ஒரு பந்து வீசிய நிலையில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் மீண்டும் வீசப்பட்ட 2வது பந்தில் ரன் எதுவும் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து 3வது பந்தில் லெக்-பை பவுண்டரி செல்ல, 4வது பந்தில் நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசினார். பின்னர் 5வது பந்தில் கவ் கார்னர் திசையில் 89 மீட்டர் தூரத்திற்கு பூரன் ஒரு சிக்சரை அடிக்க, கடைசி பந்தில் மீண்டும் பந்து சிக்சருக்கு பறந்தது. இதன்மூலமாக ஒரே ஓவரில் (6 N4 Wd5 0 L4 4 6 6) 36 ரன்களை விளாசி நிக்கோலஸ் பூரன் சாதனை படைத்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 36 ரன்களை விளாசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிக்க: ’கவாச்’ அமைப்பு இருந்தும் மேற்குவங்க ரயில் விபத்து நடந்தது எப்படி? - தோல்வி எங்கு? எழும் கேள்விகள்!

நிக்கோலஸ் பூரன்
4-4-0-3: 0 எகானமி.. வீசிய 4 ஓவர்களும் மெய்டன்! டி20 உலகக்கோப்பையில் வரலாறு படைத்த லக்கி பெர்குசன்!

2) ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியல்!

இதுதவிர, ஆண்கள் T20 WC தொடரில், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் பூரன் இணைந்துள்ளார். அந்த வகையில், 8 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் அதே நாட்டைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் முதல் (11 சிக்ஸர்) மற்றும் இரண்டாவது (10) இடத்தில் உள்ளார். இவருடன் ஆரோன் ஜோன்ஸ் உள்ளார். அதுபோல், பூரனும் ரோசோவுடன் 3 இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

3) WI-க்கு அதிக சிக்ஸர் அடித்த வீரர்!

அடுத்து டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் பூரன் இணைந்துள்ளார். 128 சிக்ஸர்களுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் பூரன். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் 124 சிக்ஸர்களுடன் 2வது இடத்தையும், 111 சிக்ஸர்களுடன் எவின் லீவீஸ் 3வது இடத்திலும் உள்ளனர்.

4) 500 + சிக்ஸர் அடித்த வீரர்!

டி20 ஆடவர் கிரிக்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலிலும் பூரன் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 502 சிக்ஸர்களுடன் 6வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (1,056), பொல்லார்டு (860), ஆண்ட்ரூ ரசூல் (686), காலின் முன்ரோ (548), ரோகித் சர்மா (514) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

இதையும் படிக்க: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்.. களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!

நிக்கோலஸ் பூரன்
2024 டி20 உலகக்கோப்பையை குறிவைக்கும் WI! 2 ஆண்டுக்கு பின் திரும்பும் ரஸ்ஸல்! கைல் மேயர்ஸ், பூரன் IN!

வரலாற்றில் டி20-யில் ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்தவர்கள் யார் யார்...?

முன்னதாக, டி20 போட்டியில் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த சாதனை பட்டியலை இங்கு பார்க்கலாம்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

2007ஆம் ஆண்டு இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்ட், இலங்கை பவுலர் தனஞ்செயாவின் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து நடப்பு ஆண்டில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கரீம் ஜனத்தின் ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்தனர். அதேபோல், நடப்பு ஆண்டில் நேபாள அணி வீரர் திபேந்திர சிங் ஐரி, கத்தார் அணி பவுலர் கம்ரன் கானின் ஓரே ஓவரில் 36 ரன்கள் குவித்தார். இந்த வரிசையில்தான் பூரனும் நேற்று இணைந்துள்ளார்.

இதையும் படிக்க: நீட் தேர்வு|குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணையில் வெளிவரும் புது தகவல்கள்.. அமைச்சர் சொன்ன பதில்!

நிக்கோலஸ் பூரன்
'மனத்துக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம்' - நிக்கோலஸ் பூரன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com