அதே கன்ட்ரோல்..அதே ஆக்‌ஷன்.. PAK-க்கு ஒரு பும்ரா ரெடி! சிறுவனின் வீடியோ பார்த்து மிரண்ட Wasim Akram!

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை போல் அப்படியே பந்துவீசும் பாகிஸ்தான் சிறுவன் இணையத்தை கலக்கிவருகிறார்.
pakistan kid recreate bumrah
pakistan kid recreate bumrahweb
Published on

2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியை இறுதிப்போட்டிவரை எடுத்துச்சென்றவர்களில் முக்கியமான வீரர் என்றால் அது ஜஸ்பிரித் பும்ரா தான். அதுவும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 27 பந்துக்கு 28 ரன்கள் என இருந்த போட்டியை இழுத்துப்பிடித்து தென்னாப்பிரிக்காவை தோல்விக்கு அழைத்துச்சென்ற ஜஸ்பிரித் பும்ரா, இந்தியாவை 11 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.

அதுமட்டுமில்லாமல் 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை என இரண்டு உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிராக மிகமுக்கியமான போட்டியில் 2-19, 3-14 என தன்னுடைய அசாத்தியமான ஸ்பெல்களால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற பும்ரா, உலக நாடுகளை கடந்து பாகிஸ்தானிலும் ரசிகர்களை சம்பாதித்துள்ளார்.

அந்தவகையில், ஜஸ்பிரித் பும்ராவை போலவே அதே ஆக்‌ஷன் மற்றும் கன்ட்ரோலுடன் பந்துவீசும் பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் பார்க்கும் எல்லோரையும் மிரட்டிவருகிறார். அவரின் வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம் “இது அப்படியே தலைசிறந்த பும்ராவை போல் உள்ளது, என்னுடைய நாளை இந்த வீடியோ சிறந்ததாக மாற்றிவிட்டது” என வியந்து பாராட்டியுள்ளார்.

pakistan kid recreate bumrah
'All in One' - உச்சம்பெற்ற மாத ரீசார்ஜ் கட்டணங்கள்.. BSNL அறிமுகப்படுத்திய அட்டகாசமான புதிய திட்டம்!

அந்த கன்ட்ரோலை பாருங்கள்..

சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இளம் சிறுவன் தனது நண்பர்களுடன் நட்புரீதியான கிரிக்கெட் விளையாட்டை விளையாடுவதை பார்க்கலாம். அதில் பந்துவீசும் சிறுவன் அப்படியே ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சைப் பின்பற்றுகிறார், அதிலும் பும்ராவை போலவே அவர் கொண்டுவரும் கன்ட்ரோல் மற்றும் யார்க்கர் பந்துகள் பார்ப்போரை வியக்க வைக்கிறது.

வீடியோ வைரலான சிறிது நேரத்திலேயே பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம், சிறுவனின் அந்தவீடியோவை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அந்த கன்ட்ரோலை பாருங்கள், இது அப்படியே தலைசிறந்த ஜஸ்பிரித் பும்ராவை போல உள்ளது. இது இன்றைய நாளுக்கான சிறந்த வீடியொவாக எனக்கு அமைந்துள்ளது” என்று பாராட்டியுள்ளார்.

pakistan kid recreate bumrah
"நாங்கள் யாரையும் புண்படுத்த நினைக்கவில்லை; இருந்தாலும்.." - மன்னிப்பு கேட்டு பதிவிட்ட ஹர்பஜன் சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com