தோனி, கோலி
தோனி, கோலிtwitter

CSK Vs RCB| ”தோனியும் நானும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்” - விராட் கோலி உருக்கம்!

"தோனியும் நானும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம்” - விராட் கோலி உருக்கம்
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில், பிளே ஆப் சுற்றில் 4-வது இடத்தைப் பிடிக்கப்போகும் அணி, எது என்பதை தீர்மானிக்கும் போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. இந்தப் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

சென்னை அணி ரன்ரேட்டில் அதிகமாய் இருந்தாலும், இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதுபோல, பெங்களூரு அணிக்கு வெறும் வெற்றிமட்டும் போதாது; இலக்குடன் கூடிய பெரிய வெற்றி தேவைப்படுகிறது. அப்போதுதான் அந்த அணி, பிளேஆப் சுற்றை நெருங்க முடியும்.

இதற்கிடையே, சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி இந்த வருடத்துடன் ஓய்வுபெறுவார் என்று கூறப்படுகிறது. 42 வயதைத் தொட்டுள்ள அவர், வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து பேட்டிங்கில் கடைசிகட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது. அதுபற்றிய பேச்சுகளும் உலா வருகின்றன.

இதையும் படிக்க: CSK Vs RCB| ’சிஎஸ்கே தோற்பது உறுதி..’ மே 18-ல் எப்போதும் தோற்காத ஆர்சிபி.. குஷியில் கோலி ரசிகர்கள்!

தோனி, கோலி
CSK VS RCB| போட்டியைக் காண டிக்கெட் புக்கிங்.. ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர்.. போலீஸ் விசாரணை!

இந்த நிலையில், ”எம்.எஸ்.தோனியும் தாமும் ஐபிஎல் தொடரில் எதிரெதிர் அணிகளில் விளையாடுவது இதுவே கடைசி முறையாக இருக்கலாம்” என ‘கிங்’ விராட் கோலி தெரிவித்திருப்பது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அவர், ”இந்தியாவின் எந்த மைதானத்திலும் தோனி விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாகும். யாருக்குத் தெரியும்? நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம். எனவே இது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இப்போட்டியில் எங்களை ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும்” எனத் தெரிவித்திருப்பது தோனி ரசிர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

தோனி - கோலி
தோனி - கோலிடிவிட்டர்

மேலும் அவர், “தோனியைப் பற்றியும், 'அவர் ஏன் போட்டியை கடைசிவரை எடுத்துச் செல்கிறார்' என்பது பற்றியும் சிலர் விமர்சித்துள்ளனர். ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும்.அந்தவகையில் என்ன செய்கிறோம் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும். அவர் பலமுறை வெற்றிகரமாக போட்டியை ஃபினிஷிங் செய்துள்ளார். எனக்கு அது மறக்க முடியாத நினைவாகும். கடைசிவரை நின்றால் நம்மால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பது தோனிக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: CSK Vs RCB| மழை பெய்தால் இதுதான் இலக்கு.. வாழ்வா, வீழ்ச்சியா கட்டத்தில் CSKவை வீழ்த்துமா RCB?

தோனி, கோலி
CSK Vs RCB | மே18 80% மழைக்கு வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை மழை குறுக்கிட்டால் என்னவெல்லாம் நடக்கலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com