வெஸ்ட் இண்டீஸை வெளியேற்றி ஷாக் கொடுக்குமா அமெரிக்கா? முக்கியமான போட்டியில் மல்லுக்கட்டும் அணிகள்!

போட்டி எண் 46: வெஸ்ட் இண்டீஸ் vs அமெரிக்கா சூப்பர் 8 பிரிவு: 2 போட்டி நடக்கும் மைதானம்: கென்ஸிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ். போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 22, இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி
wi vs usa
wi vs usaweb
Published on

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

வெஸ்ட் இண்டீஸ்: போட்டிகள் - 5, வெற்றிகள் - 4, தோல்வி - 0, முடிவு இல்லை - 0

சிறந்த பேட்ஸ்மேன்: நிகோலஸ் பூரண் - 5 போட்டிகளில் 200 ரன்கள்

சிறந்த பௌலர்: அகீல் ஹொசைன் - 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்

லீக் சுற்றின் 4 போட்டிகளையும் வென்று கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் போட்டியில் சிறு தடுமாற்றங்கள் இருந்தாலும் பாபுவா நியூ கினியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தினர். உகாண்டாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியவர்கள், நியூசிலாந்தை 13 ரன்களில் வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தனர். கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானைப் புரட்டி 104 ரன்களில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ். ஆனால் சூப்பர் 8 சுற்றில் அதே ஃபார்மைத் தொடர முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 180 ரன்கள் எடுத்த அந்த அணியால், பந்துவீச்சில் சோபிக்க முடியவில்லை. அதனால் 8 விக்கெட்டுகளில் பெரிய தோல்வியைத் தழுவியது வெஸ்ட் இண்டீஸ்.

wi vs usa
wi vs usa

அமெரிக்கா: போட்டிகள் - 5, வெற்றி - 1, தோல்விகள் - 2, டை - 1, முடிவு இல்லை - 1

சிறந்த பேட்ஸ்மேன்: ஆண்ட்ரே கஸ் - 4 இன்னிங்ஸ்களில் 182 ரன்கள்

சிறந்த பௌலர்: சௌரப் நெட்ரவால்கர் - 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகள்

அனைத்து வகையான முடிவுகளையும் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது அமெரிக்கா. இந்த உலகக் கோப்பையின் மிகப் பெரிய அப்செட்டாக பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமலும் பார்த்துக்கொண்டது இந்த அணி. இந்த இரண்டாவது சுற்று வெஸ்ட் இண்டீஸில் நடப்பதால் அது அவர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நன்கு போராடியது அந்த அணி. 194 ரன்களை சேஸ் செய்த அமெரிக்கா 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது.

wi vs usa
93 ரன்னில் பறந்த சிக்சர்.. அனல்பறந்த சின்னசாமி மைதானம்! 6வது ODI சதமடித்த மந்தனா! 4 மாபெரும் சாதனை!

அமெரிக்காவின் பேட்டிங் vs வெஸ்ட் இண்டீஸின் பௌலிங்

இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸுக்கு எளிதாக இருக்கும் என்று சொல்லிட முடியாது. அந்த அணியின் பேட்டிங் நன்றாகவே இருக்கிறது. எல்லோருமே சின்ன சின்ன கேமியோக்கள் தொடர்ந்து ஆடுகிறார்கள். ஆனால் பந்துவீச்சு தான் இங்கிலாந்துக்கு எதிராக தர்ம அடி வாங்கியது. அதிலும் குறிப்பாக அவர்களின் வேகப்பந்துவீச்சு. அல்சாரி ஜோசஃப், ரொமேரியோ ஷெபர்ட் போன்றவர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக டார்கெட் செய்தனர். அதனால் ரஸல் மீது அதிக நெருக்கடி ஏற்படுகிறது. ஒபெட் மெக்காய் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு மிகெப் பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது.

wi
wi

அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அணியின் பேட்டிங் வேறு சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பேட்ஸ்மேன்கள் எந்த அணி, எந்த பௌலர் என்றும் பார்க்காமல் அடிக்கிறார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் மேம்பட்டே ஆகவேண்டும். இப்போது போதாக்குறைக்கு ஓப்பனர் கிங் ஆடுவதும் சந்தேகம் என்று சொல்லப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். அவர் ஆடமுடியாத பட்சத்தில் அந்த அணி அனுபவ வீரர் ஷாய் ஹோப்பை களமிறக்கலாம். அப்படி இல்லையெனில் ஹிட்மெயரை எடுத்துவந்துவிட்டு, வேறோரு வீரரை ஓப்பனராகக் களமிறக்கலாம். அமெரிக்க பௌலர் சௌரப் நெட்ரவால்கர் பவர்பிளேவில் நன்றாகப் பந்துவீசுவதால், நல்ல தொடக்கம் அந்த அணிக்கு முக்கியம். ஹோப் இறங்குவதே சரியானதாக இருக்கும்.

wi vs usa
ஒரே வீரராக 18 சிக்சர்கள்.. 41 பந்தில் 144 ரன்கள்! அதிவேக சர்வதேச டி20 சதமடித்து புதிய உலகசாதனை!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்:

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவெல் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமேரியோ ஷெபர்ட், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசஃப், அகீல் ஹொசைன், குடகேஷ் மோடி.

usa
usa

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரே கஸ் (விக்கெட் கீப்பர்), நித்திஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், ஷயான் ஜெஹாங்கிர், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நாஷ்துஷ் கெஞ்சிங்கி, அலி கான், சௌரப் நெட்ரவால்கர்.

wi vs usa
‘இதுக்கு ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து கிட்ட தோத்தே போயிருக்கலாம்’! WI-க்கு மரண அடி கொடுத்து வென்ற ENG!

கவனிக்கவேண்டிய வீரர்கள்

வெஸ்ட் இண்டீஸ் - ஆண்ட்ரே ரஸல்: வெஸ்ட் இண்டீஸ் அனியின் வேகப்பந்துவீச்சு சுமையை இவரே சுமக்கவேண்டியதாக இருக்கிறது. முக்கியமான தருணங்கள் ரஸல் விக்கெட் எடுத்துக் கொடுப்பது அவசியம். அவர் பேட்டிங் பற்றி சொல்லவாவேண்டும்!

wi
wi

அமெரிக்கா: பேட்டிங்கில் தொடர்ந்து அசத்திக்கொண்டிருக்கும் ஆண்ட்ரே கஸ் நிச்சயம் அந்த அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் தடுமாறுவதால், இவர் பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.

கணிப்பு: வெஸ்ட் இண்டீஸ் தங்கள் சூப்பர் 8 கணக்கைத் தொடங்கவேண்டும்.

wi vs usa
“வெயிட் பண்ணுங்க.. விராட் கோலி பலமாக திரும்பிவருவார்..”! பிரையன் லாரா நம்பிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com