அதென்ன StopClock Rule? உலகக்கோப்பை போட்டியில் USAவிற்கு 5 பெனால்டி ரன்கள் கொடுக்கப்பட்டது ஏன்?

டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ind vs usa
ind vs usapt web
Published on

நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பந்து வீச்சை இந்தியா தேர்வு செய்ததன் மூலம் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா, தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து திணறியது. 20 ஒவர்கள் முடிவில் அந்த அணி, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய அர்ஷீதிப் சிங் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

111 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்தது. இருப்பினும். சூர்யகுமார், ஷிவம் துபே நிதானமாக விளையாடி இலக்கை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர். 18.2 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்தியா, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதிப் பெற்றது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளன.

ஐசிசியின் புதிய விதியான ஸ்டாப் கிளாக் முறைப்படி இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அமெரிக்காவுக்கு 5 ரன்கள் பெனால்டி விதிக்கப்பட்டது. இதன் மூலம், இந்திய அணியின் ஸ்கோரில் 5 ரன்கள் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்டாப் கிளாக் விதியின் படி, ஒரு ஓவரை முடித்து, அடுத்த ஓவரை 60 விநாடிக்குள் தொடங்க வேண்டும். 3 முறை இந்த விதியை மீறினால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.

இச்சூழலில், நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், இந்த விதிமுறையை அமெரிக்கா மீறியது. இதனால்,17 ஆவது ஓவர் தொடங்கும் போது நடுவர் உத்தரவின்படி, ஸ்டாப் கிளாக் முறையின் கீழ் அமெரிக்காவுக்கு பெனால்டி விதிக்கப்பட்டு 5 ரன்கள் இந்திய அணிக்கு சேர்க்கப்பட்டது. ஸ்டாப் கிளாக் விதியின்படி முதல் முறையாக பெனால்டி பெற்ற அணியாக அமெரிக்கா உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com