டி20 உலகக் கோப்பை: குரூப் பிரிவில் இந்தியாவின் டாப் 5 வீரர்கள்

இந்தியா விளையாட இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், தான் விளையாடிய 3 ஆட்டங்களையும் வென்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறது ரோஹித் அண்ட் கோ. குரூப் சுற்றில் இந்தியாவின் டாப் 5 வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் யார்?
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web
Published on

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் பல அதிர்ச்சியான முடிவுகளை கிரிக்கெட் உலகம் பார்த்திருக்கிறது. பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவும், நியூசிலாந்தை பின்னுக்குத்தள்ளி ஆப்கானிஸ்தானும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. ஸ்காட்லாந்து அணியும் இங்கிலாந்துக்குப் பயம் காட்டிவிட்டது.

பல முன்னணி அணிகள் சிறிய அணிகளுக்கு எதிராகத் தடுமாறியிருந்தாலும், இந்தியா அப்படியொரு நிலைக்குச் செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி கடைசி ஓவர் வரை சென்றிருந்தாலும், மற்ற இரு போட்டிகளையும் எளிதாக வென்றிருக்கிறது இந்தியா. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், மற்ற 3 ஆட்டங்களையும் வென்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்திருக்கிறது ரோஹித் அண்ட் கோ. குரூப் சுற்றில் இந்தியாவின் டாப் 5 வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் யார்?

5. அக்‌ஷர் படேல்

பேட்டிங்: 1 இன்னிங்ஸில் 20 ரன்கள்

பௌலிங்: 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகள்,

எகானமி: 6.5

உலகக் கோப்பைக்கான அணியில் இவர் பெயர் இருந்ததே சிலருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஜடேஜா போல் இன்னொரு வீரர் எதற்கு என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், இப்போது தன் செயல்பாடுகளால் ஜடேஜாவை அணியில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் அக்‌ஷர். பாகிஸ்தானுக்கு எதிராக 4வது வீரராக வந்து பண்ட் உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததாகட்டும், அதே போட்டியில் 16வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசியதாகட்டும், இவரது சிறு சிறு பங்களிப்புகளும் பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன. ஜடேஜாவுக்குப் பந்தைக் கொடுக்காத ரோஹித், அக்‌ஷரை நம்பிக் கொடுக்கிறார். அந்த அளவுக்கு இருந்திருக்கிறது இவரின் செயல்பாடு.

இந்திய கிரிக்கெட் அணி
WI ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் சிறந்த வீரர்.. சூப்பர் 8-ல் இந்தியாவிற்கு அவர் தேவை! - முன்னாள் ENG வீரர்

4. ஆர்ஷ்தீப் சிங்

பௌலிங்: 12 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்,

எகானமி: 6.25

இந்த உலகக் கோப்பைக்கு முன்பு ஆர்ஷ்தீப்பின் ஃபார்ம் கவலை தருவதாக இருந்தது. ஐபிஎல் அரங்கில் ரன்களும் வாரி வழங்கினார், விக்கெட் எடுக்கவும் தடுமாறினார். ஆனால், உலகக் கோப்பையில் ஆடுகளங்களை நன்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அவர். பவர்பிளேவில் ஸ்டம்புகளை அட்டாக் செய்யும் இவர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கிறார். டெத் ஓவர்களிலும் ஓரளவு கட்டுக்கோப்பாக பந்துவீசுகிறார். இந்தியாவுக்காக ஒவ்வொரு 10 பந்துக்கும் 1 விக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்.

3. ஹர்திக் பாண்டியா

பேட்டிங்: 1 இன்னிங்ஸில் 7 ரன்கள்

பௌலிங்: 12 ஓவர்களில் 7 விக்கெட்டுகள், எகானமி: 5.41

ஆர்ஷ்தீப் போல் ஹர்திக் மீதும் பல கேள்விகள் இருந்தன. சொல்லப்போனால் அதிகமாகவே இருந்தன. ஆனால், இந்திய ஜெர்ஸி அணிந்தால் தான் வேறொரு வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார் அணியின் துணைக் கேப்டன். பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு இல்லை. ஆடிய அந்த 1 இன்னிங்ஸில் இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே ஆடியிருக்கலாம். ஆனால் பந்துவீச்சில் வேறு லெவல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார் ஹர்திக். பவர்பிளே, மிடில் ஓவர் என எல்லா ஏரியாவிலும் நன்றாக வீசியிருக்கிறார். வழக்கமாக அதிக ரன்கள் கொடுப்பவர் இம்முறை மிகவும் சிக்கனமாகப் பந்துவீசியிருக்கிறார். போதாதற்கு 2 மெய்டன்கள் வேறு!

இந்திய கிரிக்கெட் அணி
33 வயதில் அறிமுகமான கேரளா வீராங்கனை.. ‘4 விக் + 2 ஓவர் மெய்டன்’! 122 ரன்னில் சுருட்டி IND வெற்றி!

2. ரிஷப் பண்ட்

பேட்டிங்: 3 இன்னிங்ஸ்களில் 96 ரன்கள்

கீப்பிங்: 3 இன்னிங்ஸ்களில் 7 கேட்கள்

பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளங்களில் கோலி, ரோஹித், சூர்யா என சீனியர் சூப்பர் ஸ்டார்கள் எல்லோருமே தடுமாற, தன் வழக்கமான அநாயச ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பண்ட். மூன்றாவது வீரராக இந்திய அணி அவரை களமிறக்க, அந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை பண்ட் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அசால்ட்டாக 36 ரன்கள் விளாசியவர், பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நிலையிலும் ஒரு மிகமுக்கிய இன்னிங்ஸை கட்டமைத்தார். அவரது இன்னிங்ஸ் இல்லாவிட்டால் நிச்சயம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றிருக்கும். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கீப்பிங்கிலும் அசத்திக்கொண்டிருக்கிறார் இவர். சில மாதங்களுக்கு முன்பு இவர் இருந்த நிலைக்கு, இப்போது கொடுக்கும் செயல்பாடுகளையும் ஆச்சர்யப்படாமல் ரசிக்க முடியாது.

1. ஜஸ்ப்ரித் பும்ரா

பௌலிங்: 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகள். எகானமி: 4.09

இவருக்கு முதல் ரேங்க் கொடுத்ததற்குக் காரணம் சொல்லவேண்டுமா என்ன! உலக கிரிக்கெட்டில் இப்போதைக்கு இவர்தான் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார் எல்லாமே. ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் தன் உலகத் தரத்தை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். வெறும் 4.09 என்ற எகானமியில் டி20 தொடரில் 12 ஓவர்கள் வீசியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக இவர் வீசிய ஸ்பெல் காலத்துக்கும் பேசப்படும்.

இந்திய கிரிக்கெட் அணி
'2027 WC வரை கம்பீர்தான் Head Coach..' ஜூன் இறுதியில் அறிவிப்பு? யாருக்கும் வழங்கப்படாத அதிகாரம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com