”ஒருத்தருக்கு சார்பா நடக்குதா”-ரிசர்வ் டே ஏன் இல்லை? விமர்சனத்தை சந்திக்கும் 2வது அரையிறுதி போட்டி!

இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருக்கின்றன. என்றாலும் இந்தப் போட்டிய பற்றிய பேச்சுகளே ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ind vs eng
ind vs engx page
Published on

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிச் சுற்றில் முதல் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், ஆப்கானை வீழ்த்தி முதல்முறையாக தென்னாப்ரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்த அணியுடன் மோதப்போவது யார் என்ற பரபரப்பு அடுத்து எட்டியுள்ளது. இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோத இருக்கின்றன. என்றாலும் இந்தப் போட்டிய பற்றிய பேச்சுகளே ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

காரணம், இன்றைய போட்டியில் 70 சதவிகிதம் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் போட்டிகள் பாதிக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், மழையால் போட்டி பாதிக்கப்பட்டாலும் அடுத்த 4-5 மணி நேரம் வரை நீட்டித்து விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்று முடிவுகளின்படி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனால், இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதையடுத்தே விமர்சனம் எழும்பியுள்ளது.

இதையும் படிக்க: கலிபோர்னியா: “இனி தப்பித்தவறி கூட மலை ஏறமாட்டேன்” - 10 நாட்களாக காட்டுக்குள் சிக்கி மீட்கப்பட்டவர்!

ind vs eng
T20WC | அதிரடி காட்டும் ரோகித்... புலிப்பாய்சலில் பும்ரா... இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இந்தியா?

கடந்த சில ஐசிசி தொடர்களில் ரிசர்வ் நாள் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆசியக் கோப்பை தொடரில்கூட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கு திடீரென ரிசர்வ் நாள் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் மிகமுக்கியமான 2வது அரையிறுதி ஆட்டத்திற்கு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படாததுதான் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லாய்ட், "இது அணிகளுக்கு நியாயமில்லை. ஒரு சிலரின் நலனுக்காக இந்தப் போட்டியை கையாளுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: முகத்தில் விழுந்த அடி..சிகிச்சை பலனின்றி அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

ind vs eng
IND vs ZIM டி20 தொடர்: சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு! 4 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு!

இதனிடைய, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகனும் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

“அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி திங்கட்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) வெற்றி பெற்றது.. செவ்வாய்கிழமை 4 மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயிற்சி எடுக்கவோ, புதிய மைதானத்தை கணிக்கவும் நேரமில்லை.. இதுதான் வீரர்களுக்கு மரியாதையா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

மைதானம் குறித்தும் விமர்சனங்களை முன் வைத்திருந்த மைக்கல் வாகன், இந்திய அணிக்கு சாதகமான சூழலே இந்த தொடர் முழுவதும் இருந்து வருவதாக நேரடியாக சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com