மேஜிக் டெலிவரி வீசிய ஸ்டார்க்! ஒன்றுமே புரியாமல் நின்ற அபிஷேக் சர்மா! 8 விக். காலி.. சரிந்தது SRH!

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதலிரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஸ்டார்க் - அபிஷேக் சர்மா
ஸ்டார்க் - அபிஷேக் சர்மாX
Published on

2024 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் அணியை சிறப்பாக வழிநடத்திய இரண்டு பெஸ்ட் கேப்டன்கள், தங்களுடைய அணியை இறுதிச்சுற்றுக்கு எடுத்துவந்துள்ளனர்.

இந்த இறுதிப்போட்டியானது சமபலம் கொண்ட இரு அணிகள், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிய இரண்டு திறமையான கேப்டன்களுக்கு இடையேயான மோதல் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு சிறந்த பந்துவீச்சு மட்டும் சிறந்த பேட்டிங் வரிசைக்கு இடையேயான மோதலாகவும், இரண்டு திறமையான பயிற்சியாளர்களுக்கு இடையேயான மோதலாகவும் மாறியுள்ளது.

ஸ்டார்க் - அபிஷேக் சர்மா
கம்மின்ஸுக்கு எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும்.. ஆனால் KKR-ன் கூடுதல் பலம்?- ரெய்னா எச்சரிக்கை!

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த பாட் கம்மின்ஸ்!

எப்போதும் முக்கியமான போட்டிகளில் டாஸ் வெல்லும் பாட் கம்மின்ஸ், 2024 ஐபிஎல் தொடரின் பைனல் போட்டியிலும் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பொதுவாக சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைதான் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் நடப்பு சீசன் முழுவதும் முதலில் பேட்டிங் விளையாடி ரன்களை குவித்துவரும் சன்ரைசர்ஸ் அணி, குவாலிஃபையர் 2 போட்டியிலும் முதலில் பேட்டிங் விளையாடி போட்டியை வென்றிருந்தது. அதனால் வின்னிங் மொமண்ட்டை மாற்றாமல் முதலில் பேட்டிங்கிற்கு சென்றுள்ளது SRH அணி. டாஸ் போடும்போது வித்தியாசமான முறையில் காய்ன்னை ஷ்ரேயாஸ் ஐயர் சுண்டிவிட்டது சிரிப்பை ஏற்படுத்தியது.

ஸ்டார்க் - அபிஷேக் சர்மா
’இடது கை ஓப்பனர்+ பகுதிநேர ஸ்பின்னர்’! ஜெய்ஸ்வாலா? அபிஷேக் சர்மாவா? இந்திய அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை!

SRH அணியை திணறடித்த Starc!

முதலில் பேட்டிங் செய்யவந்த சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா, மிட்செல் ஸ்டார்க்கை எதிர்கொண்டார். கடந்த 4 போட்டிகளாக சிறந்த ஃபார்மில் ஜொலித்து வரும் ஸ்டார்க், தன்னுடைய முதல் ஓவரை அபாரமாக வீசி அபிஷேக் சர்மாவை திணறடித்தார். ஒரு பந்தை கூட தொடமுடியாமல் அபிஷேக் சர்மா விளையாடியதை பார்க்கும் போது, விக்கெட் கீப்பரும் பவுலரும் மட்டுமே விளையாடுவது போல் இருந்தது.

ஆனால் நீண்டநேரம் அபிஷேக் சர்மாவை களத்தில் நிறுத்த விரும்பாத ஸ்டார்க், ஒரு அற்புதமான குட்லெந்த் டெலிவரியை ஸ்விங் செய்து ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். என்ன நடந்து என்பதையே கணிக்கமுடியாத அபிஷேக் சர்மா 2 ரன்னில் நடையை கட்டினார். இறுதிப்போட்டியில் முதல் ஓவர், ஸ்மார்ட் ஸ்விங், மிட்செல் ஸ்டார்க் என்ற மாயாஜாலம் மீண்டும் தொடர்ந்துள்ளது. இதனால் தான் அவரை “Big Match Player" என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

ஸ்டார்க் - அபிஷேக் சர்மா
“இங்கே செய்யமுடியாததை டி20 உலகக்கோப்பையில் செய்யுங்கள்..”! சஞ்சு சாம்சனுக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு!

4 விக்கெட்டுகளை இழந்து போராடும் SRH!

அபிஷேக் சர்மா தான் 2 ரன்னில் வெளியேறிவிட்டார் என்றால், அடுத்த ஓவரில் அரோராவை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல்பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். மற்ற போட்டிகளை போல் இல்லாமல் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் சென்னை ஆடுகளத்திற்கேற்ப பந்துவீச்சின் லெந்துகளில் மாற்றங்களை செய்தது அவர்களுக்கு வெற்றியை தந்துள்ளது.

ஒருவேளை ஸ்டார்க்கை டிராவிஸ் ஹெட்டும், அரோராவை அபிஷேக் சர்மாவும் மாறிமாறி சந்தித்திருந்தால் SRH எதிர்ப்பார்த்தது நடந்திருக்கலாம். ஆனால் 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் பறிகொடுக்க, 3வது வீரராக களத்திற்கு வந்த திரிப்பாத்தி அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் ஸ்டார்க் பந்தில் காற்றில் தூக்கியடித்து வெளியேறினார்.

3 விக்கெட்டுகளை இழந்த பிறகு மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் அடுத்தடுத்து பவுண்டரி சிக்சர்களை விரட்டி மொமண்ட்டை மாற்ற நினைத்த போது, புதிதாக பந்துவீச வந்த ஹர்சித் ரானா நிதிஷ் ரெட்டியை 13 ரன்னில் வெளியேற்றி 4வது விக்கெட்டை எடுத்துவந்து மிரட்டினார். 8 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது சன்ரைசர்ஸ் அணி.

ஸ்டார்க் - அபிஷேக் சர்மா
‘இதனால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை..’! சஞ்சு சாம்சனை சாடிய சுனில் கவாஸ்கர்!

அதன்பிறகு விக்கெட் சரிவு நின்றபாடில்லை. ரஸல் பந்துவீச்சில் ஸ்டார்க்கிடம் கேட் ஆகி நடையைக் கட்டினார் எய்டன் மார்கரம். வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஷபாஸ் அஹ்மத்தும், ரஸல் பந்துவீச்சில் அப்துல் சமாத்தும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஹர்ஷத் ரானா பந்துவீச்சில் க்ளாஸன் 16 ரன்னில் க்ளீன் போல்ட் ஆகினார். ஹைதராபாத் அணி 90 ரன்களில் 8 விக்கெட் வீழ்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com