பரபரப்பாக நடந்துவரும் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மூத்தவீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவிருக்கிறது.
ஜூலை 6 முதல் 16ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த தொடரில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாமல் அணியை சுப்மன் கில் வழிநடத்தவிருக்கிறார். சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் அணியிலிருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியின் செலக்சன் கமிட்டி சுப்மன் கில்லிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களான, அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் ரெட்டி, துஷார் தேஸ்பாண்டே பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), துருவ் ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர். ரவி பிஸ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.
போட்டி விவரம்:
முதல் டி20 போட்டி - 6 ஜூலை 2024 - 4.30 PM - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
2வது டி20 போட்டி - 7 ஜூலை 2024 - 4.30 PM - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
3வது டி20 போட்டி - 10 ஜூலை 2024 - 4.30 PM - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
4வ்து டி20 போட்டி - 13 ஜூலை 2024 - 4.30 PM - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்
5வது டி20 போட்டி - 14 ஜூலை 2024 - 4.30 PM - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்