அன்று ”இந்த வீரரே வேண்டாம்” என மறுத்த பஞ்சாப் அணி.. இன்று தனியாளாக சம்பவம் செய்த ஷசாங்! யார் இவர்?

குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
PBKS vs GT
PBKS vs GTcricinfo
Published on

இந்திய இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களின் எதிர்காலத்தையே தலைகீழாக திருப்பும் ஒரு இடமாக எப்போதும் ஐபிஎல் இருந்துவருகிறது. எங்கோ ஒரு மூலையில் முகவரி தெரியாத கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள், ஐபிஎல்லில் இடம்பெற்று யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் நம்பமுடியாத ஆட்டத்தால் ஹீரோவாக மாறுவார்கள். அந்தப் பட்டியல் இதுவரை ”ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் எனத்தொடங்கி ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங்” என நீண்டுகொண்டே செல்கிறது.

RInku SIngh
RInku SIngh-

அந்தவகையில் வெறும் இரண்டு சுற்று போட்டிகளையே கடந்திருக்கும் 2024 ஐபிஎல் தொடரில், இதுவரை “மயங்க் யாதவ், ரகுவன்சி, போரெல், மணிமாறன் சித்தார்த்” முதலிய வீரர்கள் தங்களுடைய திறமையால் ஹீரோவாக மாறியுள்ளனர். அவர்களை தொடர்ந்து இன்றையப் போட்டியில் 32 வயதான ஷஷாங்க் சிங் என்ற பஞ்சாப் வீரர் தனியாளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தன்னுடைய திறமையால் உயர்ந்து நின்றுள்ளார்.

PBKS vs GT
“உங்கள் வீரர்கள் வேறு அணியில் சிறப்பாக ஆடுகிறார்கள்..” வீரர்களை ஆதரிக்காத RCB-ஐ சாடிய ஹர்பஜன் சிங்!

200 ரன்கள் குவித்த சுப்மன் கில்!

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 3 ஓவரில் 30 ரன்கள் அடித்திருந்த போது சாஹா அவுட்டாகி வெளியேற, காயத்திற்கு பிறகு அணிக்குள் வந்த வில்லியம்சன் அடுத்தடுத்து 4 பவுண்டரிகள் அடித்து மிரட்டிவிட்டார். ஆனால் 26 ரன்னில் வில்லியம்சனும் பெவிலியன் திரும்ப, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கில் மற்றும் சாய்சுதர்சன் இருவரும் பஞ்சாப் அணியின் பவுலர்களை பிரித்து மேய்ந்தனர்.

கில்
கில்

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சாய்சுதர்சன் 173 ஸ்டிரைக்ரேட்டில் 6 பவுண்டரிகள் அடித்து மிரட்டிவிட, 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் கலக்கிப்போட்டார். 33 ரன்னில் சாய்சுதர்சன் வெளியேற, கடைசியாக களத்திற்கு வந்த திவேத்தியா 8 பந்தில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என பஞ்சாப் கிங்ஸ் அணியை சிதறடித்தார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

88 ரன்கள் இருந்தபோது நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை கில் எடுத்துவருவார் என நினைத்தபோது, 48 பந்தில் 89 ரன்களுடன் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கில்லின் அபாரமான ஆட்டத்தால் 199 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது குஜராத் அணி.

PBKS vs GT
இனி MI-க்கு வெற்றிப்பாதை தான்.. அணிக்கு திரும்பும் சூர்யகுமார் யாதவ்! வெளியான முக்கிய தகவல்!

மோசமாக தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ்!

200 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு எதுவுமே சரியாக செல்லவில்லை. இரண்டாவது ஓவரிலேயே கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்னில் போல்டாகி வெளியேற, 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை கொடுத்த பேர்ஸ்டோவும் 22 ரன்னில் போல்டாகி நடையை கட்டினார். தொடர்ந்து சாம் கரன் 5 ரன், சிக்கந்தர் ராசா 15 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, மோசமான நிலைக்கு சென்றது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஆனால் என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகளாக விழுந்தாலும், மறுமுனையில் போட்டியை விட்டுக்கொடுக்காத பிரப்சிம்ரன் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் விரட்டிக்கொண்டே இருக்க பஞ்சாப் கிங்ஸ் அணி ஏதோ ஒரு மூலையில் போட்டியை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. பிரப்சிம்ரனை 35 ரன்னில் வெளியேற்றிய நூர் அகமது போட்டியை குஜராத் டைட்டன்ஸ் அணியின் பக்கம் திருப்பிவிட்டார்.

பிரப்சிம்ரன்
பிரப்சிம்ரன்

5 விக்கெட்டுகளை இழந்தபோது கடைசி 8 ஓவரில் 90 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையிலையே பஞ்சாப் அணிக்கு போட்டியிருந்தது. போட்டி முடிந்து விட்டது, நிச்சயம் குஜராத் அணி வெற்றி பெற்றுவிடும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அதன்பிறகு நடந்ததெல்லாம் மேஜிக். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷஷாங் சிங், வேறு பிளான் வைத்திருந்தார். இத அடிக்கனும்னா பெரிய பிளான் தேவையென குஜராத் டைட்டன்ஸ் அணி டஃப் கொடுக்க, ’அடிக்கிறதுதான் பிளானே’ என 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய ஷஷாங் சிங் 200 ஸ்டிரைக்ரேட்டில் டைட்டன்ஸ் அணி பவுலர்களை மிரட்டிவிட்டார். அவர்தான் ஒருபுறம் அடிக்கிறார் என்றால் 8வது வீரராக களமிறங்கிய அஷுதோ சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என கலக்கிப்போட்டார்.

PBKS vs GT
CSK அணிக்கு பெரிய அடி.. இந்தியாவிலிருந்து வெளியேறிய முஸ்தஃபிசூர்! யார் மாற்று வீரர்?

தனியாளாக வென்ற ஷசாங் சிங்!

கடைசி 2 ஓவருக்கு 25 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்திற்கு போட்டிசெல்ல, மோஹித் சர்மா வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர்களுடன் 18 ரன்களை விரட்டிய ஷஷாங் சிங் கிட்டத்தட்ட போட்டியை வென்றே விட்டார். கடைசி 6 பந்துக்கு 7 ரன்கள் என போட்டி மாற கடைசிவரை நிலைத்துநின்ற ஷஷாங் சிங் பஞ்சாப் அணியை ஒரு அசத்தலான வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

ஷசாங் சிங்
ஷசாங் சிங்

முக்கியமான நேரத்தில் கேட்ச்களை கோட்டைவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, போட்டியையும் கோட்டைவிட்டது. நம்பவே முடியாத ஒரு இடத்திலிருந்து போட்டியை வென்றுகொடுத்த ஷஷாங் சிங் ஆட்டநாயகனாக தேந்தெடுக்கப்பட்டார்.

PBKS vs GT
MI விட்டு வெளியேறும் எண்ணத்தில் ரோகித்; Hardik-க்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை! தொடரும் பிரச்னை

ஷசாங் சிங் வேண்டாம் என்று கூறிய பஞ்சாப்..

தனியாளாக கெத்தாக போட்டியை வென்ற இந்த ஷஷாங் சிங்-ஐ தான், 2024 ஐபிஎல் ஏலத்தின் போது ”தவறாக எடுத்துவிட்டோம் இவர் எங்களுக்கு வேண்டாம்” என பஞ்சாப் கிங்ஸ் அணி ஒதுக்கியது. ஐபிஎல் ஏலத்தின் போது இரண்டு வீரர்கள் ஒரே பெயரில் இருந்ததால் தவறான ஷஷாங்கை எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் இவரை வேண்டாம் என மறுத்துவிட்டது. 19 வயதில் ஒரு வீரரும், 32 வயதில் ஒரு வீரரும் என இரண்டு வீரர்களும் ஒரே பெயரில் இருந்தனர், நாங்கள் 19 வயது ஷஷாங் சிங்குக்கு பதிலாக 32 வயது வீரரை எடுத்துவிட்டோம் என பஞ்சாப் கிங்க்ஸ் இன்றைய போட்டியின் ஹீரோவான ஷஷாங்கை ஏற்க மறுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி
பஞ்சாப் கிங்ஸ் அணி

பின்னர் எடுத்துவிட்டோம் எங்களுக்கு இவரின் திறமை மீது நம்பிக்கை இருக்கிறது என்ற பதிவை கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவிட்டது. அந்த பதிவிற்கு பதிலளித்த 32 வயது ஷஷாங், என் திறமை மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி என தெரிவித்தார். அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் வேண்டாம் என மறுக்கப்பட்டவர் தான், இன்று அந்த அணியை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி
பஞ்சாப் கிங்ஸ் அணி

ஆம் இந்தப்போட்டியில் 200 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 200 ரன்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட ரன்களை அதிகமுறை சேஸ் செய்த முதல் அணியாக மாறி வரலாறு படைத்துள்ளது. இதற்குமுன்பு 200 ரன்களை 5 முறை சேஸ்செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை முறியடித்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, 6வது முறையாக இன்று 200 ரன்களை சேஸ்செய்து அசத்தியுள்ளது.

ஷசாங் சிங்
ஷசாங் சிங்

இந்தவெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

PBKS vs GT
”இவரை தவறாக எடுத்துவிட்டோம்.. எங்களுக்கு வேண்டாம்!”- ஏலத்தில் நடந்த குழப்பம் குறித்து பஞ்சாப் கதறல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com