ஒருநாள் கிரிக்கெட்டில் 9 ஆண்டு சாதனை முறியடிப்பு...அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஸ்காட்லாந்து வீரர்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசல் படைத்துள்ளார்.
சார்லி கேசல்
சார்லி கேசல்எக்ஸ் தளம்
Published on

ஐசிசி நடத்தும் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் (2027) தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேரடியாக தகுதிபெறாத அணிகளுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் பிரதிக் அத்வாலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் நின்ற எந்த வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிகபட்சமாக மெக்ரான் கான் 17 ரன்னிலும் ஷீசன் மசூத் 10 ரன்னிலும் நடையைக் கட்டினர். மற்ற வீரர்கள் எல்லாம் ஒற்றை இலக்க ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர். அதிலும் 4 வீரர்கள் 0 டக் அவுட் முறையில் வீழ்ந்தனர். பொறுப்புணர்ந்து ஆடிய பிரதிக், 56 பந்துகளில் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அவ்வணி 21.4 ஓவர்களில் 91 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

இதையும் படிக்க: பும்ராவுக்கு ஆதரவு! ரோகித், கோலிக்கு ஆப்பு.. Teamஐ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கவுதம் கம்பீர்

சார்லி கேசல்
அடேங்கப்பா!! ஒரே ஓவரில் 43 ரன்களா? 134வருட கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் இங். வீரர் அசத்தல் சாதனை!

இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியில் அறிமுகமான சார்லி கேசல், 5.4 ஓவரில் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றினார். இதன்மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமான ககிசோ ரபாடா 16 ரன்களுக்கு 6 விக்கெட்களை எடுத்திருந்த சாதனையை முறியடித்தார்.

பின்னர் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிமையான இலக்குடன் ஆடிய ஸ்காட்லாந்து, 17.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. அவ்வணியில் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சீ 23 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்த நிலையில், பின்னர் களமிறங்கிய பிராண்டர் மெக்முல்லன் 37 ரன்களும், கேப்டன் ரிச்சி பெரிங்டன் 24 ரன்களும் எடுத்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிக்க: ஆபரேஷனில் சிக்கிய ஊசி! வலியால் துடித்த பெண்.. அலட்சியத்தில் மருத்துவமனை.. 20 ஆண்டுக்கு பிறகு நஷ்டஈடு

சார்லி கேசல்
9 நாடுகளில் 5 விக்கெட் வீழ்த்தி வரலாறு.. முரளிதரன், வார்னே-க்கு பிறகு 3வது வீரராக நாதன் லயன் சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com