WPL: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபாரம் - 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த குஜராத் ஜெயண்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Bengaluru Royal Challengers
Bengaluru Royal Challengersfile
Published on

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹேமலதா 31 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் குஜராத் 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. பெங்களூரு அணியில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளையும், மொலினெக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Bengaluru Royal Challengers
36 வருசமாச்சு ரஞ்சிக்கோப்பை வென்று! அரையிறுதியில் மும்பை - தமிழ்நாடு மோதல்! யாருக்கு வாய்ப்பு?

தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 12.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்மிர்தி மந்தனா 43 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com