"கரீபிய தீவுகளில் மீண்டும் ரசிகர்கள் கிரிக்கெட்டை காதலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" - ரோவ்மன் பவெல்

”ஒரே ஆண்டில் நீங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல” ரோமன் பாவெல்
ரோமன் பாவெல்
ரோமன் பாவெல்pt web
Published on

ஒரு போட்டியை மட்டும் மறந்துவிடுவது நல்லது

சொந்த மண்ணில் பெரும் எதிர்பார்ப்புகளோடு டி20 உலகக் கோப்பையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்றிருந்த நிலையில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.

என்னதான் தோற்றிருந்தாலும் தாங்கள் விளையாடிய ஆட்டம் குறித்து பெருமைப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவெல், தங்கள் அணியால் கரீபிய கிரிக்கெட் மீண்டும் உயிர்ப்படைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி குறித்து போட்டிக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பவெல், "எங்கள் அணி வீரர்களை நிச்சயம் பாராட்டியாகவேண்டும். அவர்கள் கடைசி வரை தங்கள் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார்கள். பேட்டிங்கைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த ஒரு பேட்டிங் பெர்ஃபாமன்ஸை சீக்கிரம் மறந்துவிடுவது நல்லது என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியில் நாங்கள் மிடில் ஓவர்களில் சரியாக விளையாடவில்லை.

இரண்டு அணிகளுமே இந்த ஆடுகளத்தில் விளையாடியதைப் பார்த்தீர்கள். அதனால் உங்களுக்கே பேட்டிங் செய்வது எளிதல்ல என்பது புரிந்துவிடும். ஒரு தொடக்கம் கிடைப்பதே இங்கு மிகவும் கடினம். மிடில் ஓவர்களில் நாங்கள் கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டோம். இந்த உலகக் கோப்பையில் அப்படி இந்தப் போட்டியில் தான் நடந்தது. அது எந்த ஒரு பேட்டிங் யூனிட்டையுமே முழுதாக காலி செய்துவிடும்.

ரோமன் பாவெல்
AFGvBAN|ஆப்கன் பயிற்சியாளர் காட்டிய சைகை.. நடிப்பை உருவாக்கிய வீரர்.. சிரிக்கவைக்கும் வைரல் #Video!

எங்களது கிரிக்கெட் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டியதுதான்

அதேசமயம் எங்கள் பௌலிங் செயல்பாடு பாராட்டத்தக்கது. அவர்கள் இன்னிங்ஸின் பாதியில் நாங்கள் எங்களுடைய முழுமையான செயல்பாட்டையும் கொடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தோம். கடைசி வரை போராடி பந்துவீசிய எங்கள் பௌலர்களுக்கு நிச்சயம் பாராட்டுகள்" என்று கூறினார்.

அதேசமயம் கடந்த ஓராண்டாக தங்கள் அணி கண்டிருக்கும் முன்னேற்றத்தைப் பற்றியும் பெருமையாகப் பேசினார் அவர். "நாங்கள் இந்த உலகக் கோப்பையை வெல்லவில்லை தான். அரையிறுதிக்கும் கூட தகுதி பெறவில்லை. ஆனால் கடந்த 12 மாதங்களாக நாங்கள் விளையாடிய கிரிக்கெட் நிச்சயம் பெருமை கொள்ளவேண்டியது. மொத்த அணிக்கும் அதற்கான பாராட்டை கொடுத்தாகவேண்டும். ஒரே ஆண்டில் நீங்கள் சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல" என்று தங்கள் அணியின் செயல்பாடு தனக்குத் திருப்தியளிப்பதாகவே கூறியிருக்கிறார்.

ரோமன் பாவெல்
T20 World cup: ரோகித் சர்மா அதிரடி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

கரீபியதீவுகளில் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வரவேற்பு

அதுமட்டுமல்லாமல் தங்கள் அணியின் செயல்பாடு கரீபிய மக்களுக்கு மீண்டும் உத்வேகம் கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார் பவெல். "நாங்கள் உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்கலாம். ஆனால், பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். கரீபிய தீவுகளில் இப்போது கிரிக்கெட் மீது மீண்டும் ஈர்ப்பு வரத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் பல அற்புதமான விஷயங்கள் செய்திருக்கிறோம். ஆனால் அடுத்த கட்ட வேலை இப்போது இருந்தே தொடங்கவேண்டும்.

நாங்கள் ஒரு அணியாக இனி பணியாற்றவேண்டும். இன்னும் தரமான கிரிக்கெட் விளையாடும்போது எங்களால் தரவரிசையில் நிச்சயம் முன்னேற்றம் காண முடியும். அதன்மூலம் கரீபிய மக்களை நிச்சயம் எங்களால் மேலும் பெருமைப்படுத்த முடியும்" என்று கூறியிருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன்.

இந்த உலகக் கோப்பையின் தொடக்க கட்டத்தில் ரசிகர்கள் அதிக அளவில் வரவில்லை என்ற விமர்சனம் இருந்தது. காலை நேரங்களில் போட்டி நடத்தப்பட்டதால் அதிக ரசிகர்கள் நேரில் ஆட்டத்தைக் காண வரவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் போட்டிகளின்போது ரசிகர் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. சூப்பர் 8 சுற்றின்போது அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதைப் பற்றிப் பேசிய பவெல், "அது மிகவும் அற்புதமான விஷயம். நாங்கள் விளையாடிய ஒவ்வொரு கிரவுண்டிலுமே எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் எங்கள் அணி பற்றி நல்ல பேச்சு இருந்தது. எங்கள் அணி வீரர்கள் எல்லோரும் அதநால் மகிழ்ச்சியடைந்தார்கள். கரீபிய ஆடுகளங்களில் மீண்டும் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனெனில் வெகுகாலம் அது அடங்கிப்போயிருந்தது. இப்போது ரசிகர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் கிரிக்கெட் கீதத்தைக் கேட்கும்போது வீரர்களாக நாங்கள் அதை உணர்கிறோம். அது சரியான பாதையில் நாங்கள் செல்வதைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன்" என்றும் கூறினார்.

ரோமன் பாவெல்
அமெரிக்காவின் கிராஸ்ரூட் கிரிக்கெட்டுக்கு என்ன வேண்டும்? கோரிக்கை வைக்கும் ஹர்மீத் சிங்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com