'MI' BACK TO FORM! அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ரோகித், ஹர்திக், SKY! #ViralVideo

மும்பை அணியைச் சேர்ந்த ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கவுரவிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பானி வீட்டு விழா
அம்பானி வீட்டு விழாஎக்ஸ் தளம்
Published on

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி மற்றும் மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்புக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக் கோப்பயைக் கைப்பற்றிய இந்திய அணியில் மும்பை அணியைச் சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

உண்மையில் இந்நால்வரின் பங்கும் இந்தியா சாம்பியன் ஆவதற்கு உறுதியாக இருந்தது. அதிலும் இறுதிப்போட்டியில் பும்ரா, ஹர்திக், சூர்யகுமாரின் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டாலே இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்த நிலையில், மும்பை அணியைச் சேர்ந்த ரோகித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கவுரவிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ”ஹர்திக்கும் ஒரு மனிதன்தான்” - உருகிய க்ருணால் பாண்டியா.. குடும்ப கொண்டாட்டத்தில் இடம்பெறாத நடாஷா!

அம்பானி வீட்டு விழா
இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்| குஜராத்திலிருந்து பஸ் கொண்டுவரப்பட்டது ஏன்? கேள்வி எழுப்பும் மும்பை

மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி வருபவர்கள் என்ற வகையில், அவர்களுக்கு ஆச்சர்ய அதிர்ச்சியை அளித்தார் நீட்டா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அவர், தனது மகன் திருமண நிகழ்ச்சிகளுக்கு இடையே, அதே மேடையில் இந்திய அணிக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, அவர்களை அணைத்து இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்ததற்காக வாழ்த்துக்களை கூறினார்.

அங்கு இருந்த விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்கள் மூவருக்கும் கை தட்டி வாழ்த்தினர். 2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியை பறித்ததற்காக அவர், அம்பானி குடும்பத்தினர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வு அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: INDvZIM|116 ரன் இலக்கு.. சீட்டுகட்டுபோல் சரிந்த விக்கெட்கள்.. ஜிம்பாப்வே அணியிடம் வீழ்ந்தது இந்தியா!

அம்பானி வீட்டு விழா
வெற்றிக் கொண்டாட்டம் முடிந்தபின் இங்கிலாந்துக்குப் பயணம்.. அவசரமாய் புறப்பட்டுச் சென்ற விராட் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com