T20WC 2024 | உலகக்கோப்பையுடன் ஓய்வு... சத்தமின்றி 7 சாதனைகளைப் படைத்த ரோகித் சர்மா!

டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்ததை அடுத்து, ரோகித்தும் சில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.
ரோகித் சர்மா
ரோகித் சர்மாஎக்ஸ் தளம்
Published on

2024 டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த பிறகு, கேப்டன் ரோகித் சர்மாவின் புகழ் பட்டிதொட்டி எங்கும் பரவிவருகிறது. உலகக்கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்களான கபில் தேவ், மகேந்திர சிங் தோனி அடுத்து, இவரது பெயரும் இந்திய கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோப்பையை வென்றுகொடுத்ததை அடுத்து, ரோகித்தும் சில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். அவற்றை பார்ப்போம்...

* டி20 போட்டிகளில் 50 வெற்றிகளைப் பதிவுசெய்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவர் 61 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதில் 50 போட்டிகளில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்மூலம் அவரது வெற்றி சதவீதம் 78ஐ தாண்டியுள்ளது. இவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். அவர் 48 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

இதையும் படிக்க: மாலத்தீவு | அதிபருக்கு சூன்யம் வைத்ததாக 2 அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது - விசாரணை தீவிரம்!

ரோகித் சர்மா
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

* டி20 உலகக் கோப்பையை இரண்டுமுறை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார். இதற்குமுன்பு கடந்த 2007ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான டி20 உலகக்கோப்பையை வென்றபோது, அந்த தொடரின், இறுதிப்போட்டியில் பின்வரிசையில் களமிறங்கிய ரோகித் 16 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்தார். இதன்மூலம் உலகக்கோப்பையை கேப்டனாகவும் ஒரு வீரராகவும் வென்றவராக பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

* டி20 உலகக்கோப்பை தொடர் ஒன்றில், அனைத்துப் போட்டிகளையும் வென்ற அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சிறப்பையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை வீழ்த்திய ரோகித் படை, கனடா உடனான கடைசி லீக் போட்டி மழையால் ரத்து ஆனது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தொடர்ந்து, அரையிறுதியில் இங்கிலாந்தை சாய்த்ததுடன் இறுதிப்போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணியின் வீரராக, கேப்டனாக செய்ய முடியாததை பயிற்சியாளராக சாதித்த ராகுல் டிராவிட்!

ரோகித் சர்மா
‘இதுதான் எனது கடைசி டி20 கிரிக்கெட் போட்டி’ - உலகக்கோப்பை வென்ற கையுடன் ஓய்வை அறிவித்தார் கோலி!

* நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனுக்குப் பிறகு அனைத்து வடிவங்களிலும் ஐசிசி இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டாவது கேப்டன் ரோகித் சர்மா ஆவார்.

* டி20 போட்டிகளில் 205 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். தவிர, இப்போட்டிகளில் அதிக பவுண்டரிகள் (383) அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

* இதுவரை 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித், 4,231 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அதில் 5 சதங்களும், 32 அரைசதங்களும் அடக்கம். அதிக அரைசதங்கள் அடித்த பட்டியலில் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். அதிவேகமாக 3,500 ரன்கள் (126 இன்னிங்ஸ்). அதிக டி20 போடிகளில் (159) விளையாடிய பட்டியலிலும் ரோகித்தே முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலியும் (125), பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் (123) உள்ளனர். ஆனால், ரோகித்தும் விராட் கோலியும் நடப்பு உலகக்கோப்பை தொடருடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, அதிகபட்சமாக 14 போட்டிகளில் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி (16) உள்ளார். 2வது இடத்தில் சூர்யகுமார் யாதவ் (15) உள்ளார். தலா 14 முறையுடன் ரோகித் சர்மா மூன்று வீரர்களுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: 'UPSC தேர்வு' எழுதாமலேயே ஐஏஎஸ் அதிகாரி ஆனாரா? - சர்ச்சை குறித்து ஓம் பிர்லா மகள் கொடுத்த விளக்கம்!

ரோகித் சர்மா
விராட், ரோகித் இரு ஜாம்பவான்கள் ஓய்வு.. வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடிய ட்ராவிட்.. என்ன நடந்தது நேற்று?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com