"கோலி தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்கு சேமித்து வைத்திருக்கலாம்" - ரோஹித் ஷர்மா

”விராட்டின் கிளாஸ் எங்களுக்குத் தெரியும். 15 வருடம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு ஃபார்ம் பிரச்னை கிடையாது. ஒருவேளை அவர் தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்கு சேமித்து வைத்திருக்கலாம்” - விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணிpt web
Published on

இந்தியா vs இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது இந்தியா. முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் விளாசிய இந்திய அணி, இங்கிலாந்தை 17-வது ஓவரிலேயே 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.

இதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறது மென் இன் புளூ. போட்டி முடிந்த பின் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வீரரும் தங்களைத் தயார் படுத்திக்கொண்டதே இந்தியாவின் இந்த வெற்றிப் பயணத்துக்குக் காரணம் என்று கூறினார். அதேசமயம் விராட் கோலி தன்னுடைய பெஸ்ட்டை இறுதிப் போட்டிக்கு சேமித்து வைத்திருக்கலாம் என்று பாசிடிவாக பேசினார்.

மழையால் தாமதமான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பௌலிங் தேர்வு செய்தது. இடையிலும் மழை பெய்துகொண்டே இருந்ததால், பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. ஆடுகளத்தில் பெரிதாக பௌன்ஸ் இல்லை. அதனால் பெரிய ஓவர்கள் வருவது சிரமமாக இருந்தது. 160 ரன்களே இந்த ஆடுகளத்தில் வின்னிங் ஸ்கோர் என்று கருதப்பட்டது. அப்படிப்பட்ட நிலையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி, 171 ரன்கள் விளாசியது.

இந்திய கிரிக்கெட் அணி
”இந்தியாவுக்கு சாதகமாக மைதானமா? உங்க முட்டாள்தனத்தை நிறுத்துங்கள்” - மைக்கல் வாகனை விளாசிய ஹர்பஜன்!

இந்திய அணியின் சிறப்பான ஸ்கோர்

பேட்டிங் செய்தபோது இருந்த மனநிலை பற்றிப் பேசிய இந்திய கேப்டன் ரோஹித், "ஒரு கட்டத்தில் 140 முதல் 150 ரன்கள் வரை எடுத்தாலே வெற்றிக்குப் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் நன்கு ரன்கள் வந்துவிட்டன. நானும் சூர்யகுமார் யாதவும் பேட்டிங் செய்த விதத்தில் (ரோஹித் ஷர்மா - 57, சூர்யகுமார் யாதவ் - 47, பார்ட்னர்ஷிப் - 50 பந்துகளில் 73 ரன்கள்), எங்களால் இன்னும் ஒரு 20 முதல் 25 ரன்கள் வரை கூடுதலாக எடுக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் நான் அதை வெளியே சொல்லிட விரும்பவில்லை. பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு அந்தத் தருணத்தில் எப்படி விளையாடத் தோன்றுகிறதோ அப்படி விளையாடட்டும் என்று விட்டுவிட்டேன். 175 என்பது மிகவும் சிறந்த ஸ்கோர்" என்று கூறினார்.

இந்தியா மிகப் பெரிய ஸ்கோர் எடுத்திருந்த நிலையில் வந்தவுடனேயே அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. பட்லர் பௌண்டரிகளாக விளாசி 3 ஓவர்களிலேயே 23 ரன்கள் வந்தது. அதனால் நான்காவது ஓவரிலேயே அக்‌ஷர் படேலை எடுத்து வந்தார் ரோஹித். அதன் பலனாக முதல் பந்திலேயே பட்லர் விக்கெட்டை வீழ்த்தினார் அவர். அதன்பிறகு இந்திய சுழல் அட்டாக்குக்கு இங்கிலாந்து வீரர்கள் மொத்தமாக காலியாகினர். அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ என டாப் ஆர்டர் மொத்தத்தையும் காலி செய்த அக்‌ஷர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்திய கிரிக்கெட் அணி
தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கம்: RTI கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

சுழல் ஜாம்பவான்கள்

இந்தியாவின் வெற்றிக்கு இந்த ஸ்பின் யூனிட்டைக் காரணமாகக் கூறினார் ரோஹித். "எங்கள் பௌலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அக்‌ஷர் படேலும், குல்தீப் யாதவும் அட்டகாசமான ஸ்பின்னர்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு எதிராக ஷாட்கள் ஆடுவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. நெருக்கடியான சூழ்நிலையில் அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். முதல் இன்னிங்ஸ் முடிந்த பிறகு நாங்கள் கூடி ஆலோசித்தபோது ஸ்டம்ப் லைனில் அதிகம் பந்துவீசும் என்பதைத்தான் வலியுறுத்தினோம். அதைத்தான் அவர்கள் செய்தார்கள்" என்று இரு ஸ்பின்னர்களையும் பாராட்டினார் ரோஹித்.

இந்திய அணி இதுவரை எந்தப் போட்டியிலும் தோற்காது இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவருவதற்கு வீரர்கள் அனைவரும் சரியாக சூழ்நிலைகளுக்கு செட் ஆனது தான் காரணம் என்று கூறினார் இந்திய கேப்டன். "அரையிறுதியில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் கடினமாக உழைத்தோம். ஒவ்வொருவருமே தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த செயல்பாட்டுக்கு இன்னொரு முக்கியக் காரணம் நாங்கள் சவாலான கண்டிஷன்களுக்கு எங்களை நன்றாக தயார் படுத்திக்கொண்டோம். அதுதான் எங்கள் வெற்றிக்கான முக்கியக் காரணமாக இதுவரை இருந்திருக்கிறது. பௌலர்களும், பேட்ஸ்மேன்களும் சூழ்நிலைக்கு ஏற்ப சரியாக தகவமைத்துக்கொண்டால் எல்லாம் சரியாக நடக்கத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல் ஒரு அணியாக நாங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராகக் கூட நாங்கள் எந்தக் கட்டத்திலும் பதற்றப்படவில்லை. அமைதியாக இருப்பது நல்ல முடிவுகள் எடுக்கக் காரணமாக இருக்கிறது" என்றார் ரோஹித்.

இந்திய கிரிக்கெட் அணி
“என் கணவர் இயக்குநர் என்று கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்” - போலீசில் பெண் புகார்!

விராட் ஃபார்ம்

என்னதான் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், விராட் கோலியின் ஃபார்ம் மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது. 7 இன்னிங்ஸ்களில் வெறும் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் விராட். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறிக்கொண்டே இருக்கிறார். அவரது ஃபார்ம் பற்றி ரோஹித்திடம் கேட்டபோது, "விராட்டின் கிளாஸ் எங்களுக்குத் தெரியும். 15 வருடம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு வீரருக்கு ஃபார்ம் பிரச்னை கிடையாது. ஒருவேளை அவர் தன்னுடைய பெஸ்ட்டை ஃபைனலுக்கு சேமித்து வைத்திருக்கலாம்" என்று கோலிக்கு ஆதரவாகப் பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் மனு – பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com