தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகிய BCCI.. நிராகரிப்பதற்கு ரிக்கி பாண்டிங் சொன்ன நெகிழ்ச்சி காரணம்!

இந்திய தலைமைப் பயிற்சியாளர் பதவியை நிராகரித்ததாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்ட்விட்டர்
Published on

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவருடைய பதவிக்கு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசித் தேதி மே 27.

அதேநேரத்தில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பயிற்சியாளர் ஜூலை 2024 முதல் டிசம்பர் 2027 வரை பணியாற்றலாம் எனவும், டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தப் பதவிக்கு நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங், ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், கெளதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு ஆப்பு.. மாலத்தீவுக்கு அடித்த ஜாக்பாட்.. ஒரேநேரத்தில் OK சொன்ன இந்தியா, சீனா!

பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

இதற்கிடையே, இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்பை, தான் நிராகரித்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஒரு தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக எனக்கு விருப்பம்தான். ஆனால், எனக்கு வேறு சில விஷயங்களும் என் வாழ்வில் இருக்கின்றன. என்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க நான் விரும்புகிறேன். இந்திய அணிக்குப் பயிற்சியாளராகிவிட்டால் ஐபிஎல் அணியில் இருக்கக்கூடாது. அதிலிருந்தும் நான் வெளியேற வேண்டியிருக்கும்.

அது மட்டுமின்றி, தேசிய அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவியில் ஓர் ஆண்டில் 10 - 11 மாதங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு அதைச் செய்ய விருப்பமிருந்தாலும், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது. என் குடும்பத்தினர் மற்றும் என் குழந்தைகள் கடந்த ஐந்து வாரங்களாக ஐபிஎல்லில் என்னுடன் இருந்தனர். ஆண்டுதோறும் தவறாமல் என்னுடன் வந்துவிடுவார்கள்.

இதையும் படிக்க: “நீங்கள் வெல்வதை பார்க்க விரும்புகிறேன்” - வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு.. குழம்பிய ரசிகர்கள்!

பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
டிராவிட் இடத்தில் கெளதம் காம்பீர்.. அணுகிய நிர்வாகம்.. IPL Final-க்குப் பிறகு முடிவு?

எனக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக என் மகனிடம் சொன்னபோது, ’அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாங்களும் இந்தியாவில் இருக்க முடியும்’ என்று கூறினான். என் குழந்தைகள் இந்தியாவில் இருப்பதையும், இங்குள்ள கிரிக்கெட் கலாசாரத்தையும் அந்தளவு நேசிக்கின்றனர். ஆனால், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறையில் அது சரியாக இருக்காது. ஜஸ்டின் லாங்கர், ஸ்டீஃபன் ஃப்ளெமிங் பெயர்களும் பயிற்சியாளர் பரிந்துரையில் இருப்பதைப் பார்த்தேன். கடந்த 2 நாள்களாக கெளதம் காம்பீர் பெயரும் இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், நான் சொன்ன காரணங்களால் எனக்கு அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் கடந்த 7 சீசன்களாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

பிசிசிஐ, ரிக்கி பாண்டிங்
இந்திய அணிக்கு அடுத்த ‘தலைமை பயிற்சியாளர்’ யார்? .. தோனியின் உதவியை நாடும் பிசிசிஐ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com