’இன்று RCB தோற்றால் நாளை CSK ஜெர்ஸி அணிவேன்’ - ஏபி டிவில்லியர்ஸ் சவால்

இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வியுற்றால், நாளை சென்னை அணியின் ஜெர்சியை அணிந்துகொள்வதாக ஏ.பி.டி.வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.பி.டி.வில்லியர்ஸ்
ஏ.பி.டி.வில்லியர்ஸ்ட்விட்டர்
Published on

இரவு வந்துவிட்டால் போதும், இறுதிப்பந்தின்போது இருக்கையில் அமர்ந்திருப்பவர்களையும் நுனிக்குக் கொண்டுவர வைக்கும் ஐபிஎல் திருவிழா, இந்த சீசனிலும் தொடக்கம் முதலே வீறுநடை போட்டு வருகிறது. அந்த வகையில், 10 அணிகளும் போட்டிபோட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துவருகின்றன. இந்த நிலையில், இன்று (மார்ச் 25) நடைபெறும் நடப்பு சீசனின் 6வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி தற்போது ஆடி வருகிறது.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் பெங்களூரு அணி தோல்வியுற்றால், நாளை (மார்ச் 26) சென்னை அணியின் ஜெர்சியை அணிந்துகொள்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இன்றைய போட்டியின் கமெண்ட்ரியின்போது இதை அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக டிவில்லியர்ஸ், இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் கமெண்ட்ரி செய்தனர். அப்போது தான் ட்வில்லியர்ஸ் இதனை தெரிவித்தார்.

அதேபோல், ‘ஆர்சிபி இன்று வெற்றி பெற்றால் நான் ஆர்சிபி ஜெர்ஸி அணிவேன்’ என்று ஸ்காட் ஸ்டைரீஸ் தெரிவித்தார்.

இன்றைய போட்டியில் எப்படியும் வென்றுவிடும் என்ற நம்பிக்கையிலேயே டிவில்லியர்ஸ் இதைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ”ஐபிஎல் கிரிக்கெட் கோப்பையை இந்த வருடம் பெங்களூரு அணி வெல்லும்” என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணியில் 2008 முதல் 2021 வரை விளையாடிய டி வில்லியர்ஸ் 5,162 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 133* ரன்களை எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 40 அரைசதங்களும் அடக்கம்.

முன்னதாக, சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய முதல் போட்டியில் பெங்களூரு அணி, சென்னை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: “பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

ஏ.பி.டி.வில்லியர்ஸ்
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.. தோனிக்கு ஃபேர்வெல் நடத்த சரியான வாய்ப்பு - சாதிக்குமா சிஎஸ்கே படை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com