RCB அணியா இது? ஆல்அவுட்டான குஜராத் டைட்டன்ஸ்! 148 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸ் அணியை 147 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளது ஆர்சிபி அணி.
rcb vs gt
rcb vs gtcricinfo
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 287 ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்சிபி அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுகொடுத்து ஒரு மோசமான சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் தங்களுடைய மோசமான பந்துவீச்சு காரணமாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆர்சிபி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் போராடி வருகிறது.

கிட்டத்தட்ட நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கும் ஆர்சிபி அணி, மீதமிருக்கும் போட்டிகளில் வாழ்வா-சாவா ஆட்டம் ஆடிவருகிறது. ”எந்த அணியை காலிசெய்யலாம் என விளையாடிவரும்” ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து சம்பவம் செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

RCB
RCB

அதற்குபிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய ஆர்சிபி, தற்போது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வைத்து மீண்டுமொரு தரமான அடியை கொடுத்துவருகிறது.

rcb vs gt
”எங்களுடைய தேர்வு யார் சிறந்தவர் என்பதை பொறுத்து அல்ல” - அணிதேர்வு குறித்து அஜித் அகர்கர் விளக்கம்

ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு பலிகடாவான GT!

டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூபிளெசி பந்துவீச்சை தேர்வுசெய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒரு தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ், முதல் ஓவரிலேயே ரிதிமான் சாஹாவை வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் அடுத்த ஓவரில் கில்லை சிராஜ் வெளியேற்ற, டைட்டன்ஸ் அணியின் மெயின் பேட்டராக விளங்கிவரும் சாய்சுதர்சனை காம்ரான் க்ரீன் 6 ரன்னில் வெளியேற்றி கலக்கிப்போட்டார்.

siraj
siraj

19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழ 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாருக் கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய சாருக் கான் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட, மறுமுனையில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த டேவிட் மில்லர் அவருடைய பங்கிற்கு மிரட்டிவிட்டார். சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, 37 ரன்னில் சாருக்கானை ரன் அவுட்டில் வெளியேற்றிய விராட் கோலி விக்கெட்டை எடுத்துவந்தார். உடன் ஆபத்தான வீரராக தெரிந்த டேவிட் மில்லரை 30 ரன்னில் வெளியேற்றினார் கரன் ஷர்மா.

சாருக் கான்
சாருக் கான்

ஒரு பெரிய டோட்டலை நோக்கி விளையாடிய குஜராத் அணியை ஆர்சிபி அணி இழுத்து பிடிக்க, அடுத்து களத்திற்கு வந்த ராகுல் திவேத்தியா மற்றும் ரசீத் கான் இருவரும் ரன்களை எடுத்துவர போராடினர். ஆனால் சரியான இடைவெளியில் விக்கெட்டை எடுத்துவந்த ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 147 ரன்னில் ஆல்அவுட்டாக்கி கலக்கிப்போட்டது.

விராட் கோலி
விராட் கோலி

மோசமான பந்துவீச்சை வைத்திருக்கும் ஒரு அணி என விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணி, “இது உண்மையில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு தானா?” என கேட்கும் அளவு ஒரு தரமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளது.

rcb vs gt
மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com