’வரலாற்றில் ஒருசிலரால் மட்டுமே அது முடியும்’ - வார்னே, வாசிம் அக்ரமுடன் பும்ராவை ஒப்பிட்ட சாஸ்திரி!

கிரிக்கெட் வரலாற்றில் ஒருசிலரால் மட்டுமே பந்திற்கு கட்டளையிட்டு இதைச்செய் என்று செய்துகாமிக்க முடியும், அத்தகைய நிலையை பும்ரா உலகக்கோப்பையில் வைத்திருந்தார் என்று ரவி சாஸ்திரி புகழ்ந்து கூறியுள்ளார்.
பும்ரா
பும்ராRicardo Mazalan
Published on

தற்கால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் என்றால், உலகத்தின் அனைத்து ஜாம்பவான் கிரிக்கெட்டர்களும் பும்ரா என்ற ஒற்றை பெயரைத்தான் குறிப்பிடுவார்கள்.

நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை பைனலில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 30 பந்துக்கு 30 ரன்களே தேவையிருந்த நிலையில், “பும்ரா வந்து பந்துவீசுங்கள், இந்தியாவை இந்த இடத்திலிருந்து வென்று கொடுங்கள்” என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பதிவிட்டார். அதைப்போலவே கடைசி 2 ஓவர்களை வீசிய பும்ரா, தென்னாப்பிரிக்கா அணியை பின்னுக்கு தள்ளி இந்தியாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச்சென்றார்.

bumrah
bumrah

ஒரு கட்டத்தில் சச்சின் அவுட்டானால் போட்டியே முடிந்துவிட்டது என டிவியை அனைத்துவிட்டு சென்றுவிட்ட ரசிகர்களை, எப்படி தோனி இருக்கும்வரை ஆட்டத்தை பார்க்கலாம் ஏதாவது செய்வார் என்ற கடைசித்துளி நம்பிக்கை பிறந்ததோ.. அதேபோலான நம்பிக்கையை தற்போது பும்ராவும் ஏற்படுத்தியுள்ளார்.

எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் பும்ராவால் வெற்றியை தேடித்தர முடியும்’ என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் தாண்டி உலக கிரிக்கெட்டர்களிடையேயும் சென்று சேர்ந்துள்ளது. அந்தளவு உலக கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

பும்ரா
IND vs SL: இறுதிவரை விட்டுக்கொடுக்காத இலங்கை அணி.. சமனில் முடிந்த போட்டி! ஏன் சூப்பர் ஓவர் இல்லை?

பந்திடம் கட்டளையிட்டு வேலைவாங்க வெகுசிலரால் மட்டுமே முடியும்..

பும்ராவின் திறமையை பாராட்ட நினைத்த முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, Bowling Magician என்பதற்குள் அவரை அடக்கிவிடாமல் அதற்கும் மேலான ஒரு புகழாரத்தை எடுத்துவந்தார். ஐசிசி உடன் பேசியிருக்கும் ரவிசாஸ்திரி, டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் பும்ரா பந்திடம் கட்டளையிட்டு வேலைவாங்கினார், இதை உலககிரிக்கெட்டில் வெகுசிலரே செய்துள்ளனர் என்று பாராட்டினார். அவர் அதற்கு சான்றாக பாகிஸ்தானுக்கு எதிரான ரிஸ்வான் விக்கெட்டையும், டி20 உலகக்கோப்பை பைனலில் யான்சனின் விக்கெட்டையும் மேற்கோள்காட்டினார்.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராஎக்ஸ் தளம்

பும்ராவின் பந்துவீச்சு ஆதிக்கம் குறித்து பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, “முக்கியமான நேரத்தில் என்ன தேவை என்பதை அவர் உலகிற்கு எடுத்துக் காட்டினார். ஒரு பந்துவீச்சாளரின் வாழ்க்கையில் பந்து உங்கள் கையில் இருக்கும்போது, ​​இதைச் செய் என நீங்கள் பந்திற்கு கட்டளையிட்டால் பந்து அதைச்செய்துவிடும் என்பதை அடிக்கடி உங்களால் பார்க்க முடியாது. அது ஒரு பவுலரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் அரிதாகவே நடக்கக்கூடியது.

பும்ரா
பும்ரா

அதை உலகக்கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷேன் வார்னே முதலிய பவுலர்கள் மட்டுமே கொண்டிருந்தார்கள். ஷேன் வார்னே அதை சரியாக செய்வார், அவரால் ’அங்கு சென்று பிட்ச் ஆகு, லெக் ஸ்டம்பில் அடி’ என்று பந்திற்கு கட்டளையிட முடியும், பந்தும் அதை அப்படியே பின்பற்றும். அத்தகைய திறமையை டி20 உலகக்கோப்பை முழுவதும் பும்ரா வைத்திருந்தார்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

பும்ரா
பெண் வீராங்கனையுடன் மோதியது ஆணா? 46 நொடிகளில் முடிந்த போட்டி.. பாரீஸ் ஒலிம்பிக்கில் எழுந்த சர்ச்சை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com