ஐபிஎல் தொடரில் Play Off சுற்றுக்கு செல்ல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக புள்ளிகள் பட்டியல் கூறுகிறது.
ஐபிஎல் தொடர் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவுப் பெறுகிறது. இன்றையப் போட்டியில் மும்பை - ஹைதராபாத் மற்றும் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன. இப்போதைய நிலவரப்படி புள்ளிகள் பட்டியில் குஜராத் டைடன்ஸ், சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் Play Off சுற்றுக்கு செல்ல தகுதிப்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடிக்க 3 அணிகளுக்குள் போட்டி நிலவுகிறது. அதன்படி பெங்களூரு, மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. இதன் விடையை இன்று நடைபெறும் போட்டிகளின் முடிவு தெளிவுப்படுத்தி விடும்.
இந்த மூன்று அணிகளில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் தலா 14 புள்ளிகளுடன் இருக்கின்றன. மும்பை 13 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்நிலையில் இன்று பெங்களூரு - மும்பை அணிகளில் ஏதேனும் ஓர் அணி ஜெயிக்கும்பட்சத்தில், பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். சரி, இதில் எங்கிருந்து ராஜஸ்தான் வந்தது தெரியுமா? சொல்கிறோம்!
ஐபிஎல் 2023 தொடரின் 70வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த சீசனின் கடைசி லீக் போட்டியாக அமைந்திருக்கும் இது, பிளேஆஃப்-க்கு தகுதித்பெற பெங்களூருக்கு முக்கியமானதாக இருக்கும்.
இதேபோல 69வது லீக் போட்டி மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையே இன்றுதான் நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மும்பை பிளே ஆப்-க்குள் நுழைய முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும் மும்பை இப்போட்டியில் ஹைதரபாத் அணியை வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பெறுவதோடு, நெட் ரன்ரேட்டையும் அதிகரிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் பிளேஆப்-க்குள் நுழைய முடியும். ஏனெனில் பெங்களூரு அணி 0.180 நெட் ரன்ரேட் பெற்று மும்பையைவிட முன்னிலை வகிக்கிறது.
இதனால் மும்பை - பெங்களூரு என இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற கடுமையாக போராடும்.
சரி விஷயத்துக்கு வருவோம். மும்பை - பெங்களூருவுக்கு இடையிலான இந்தப் போட்டியில் எங்கே இருந்து ராஜஸ்தான் வந்தது?
ராஜஸ்தானுக்கு மேற்கொண்டு எந்தப் போட்டியும் இல்லை. ராஜஸ்தான் Play Off சுற்றுக்கு தகுதிப்பெற வேண்டுமென்றால் இன்று நடைபெறும் போட்டிகளில் பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தோற்க வேண்டும்.
அதிலும் பெங்களூரு அணி மோசமான தோல்வியை தழுவ வேண்டும். ஏனென்றால் நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தானை விட பெங்களூரு நெட் ரன்ரேட் கூடதலாக இருக்கிறது. மேலும் மும்பை ரன்ரேட்டைவிட ராஜஸ்தானுக்கு அதிகமிருக்கிறது. எனவே இரு அணிகளின் தோல்விக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று காத்திருக்கும்.
இதனை குறிப்பிடும் விதமாக, ராஜஸ்தான் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் போஸ்ட் ஒன்று போட்டிருக்கிறார். தன் அணி வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை அதில் பகிர்ந்திருக்கும் அஸ்வின், கேப்ஷனில் “இன்று ஒரு நாள், குஜராத்தி உணவுகள் (பெங்களூருவுக்கு எதிராக குஜராத் அணி விளையாடுகிறது) நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும்; தெலுங்கு (மும்பைக்கு எதிராக ஐதராபாத் அணி விளையாடுகிறது) நம் அணியின் அதிகாரப்பூர்வ மொழியாக மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது...” என்பதுபோல கலாயாக போட்டிருக்கிறார்!
இது தற்போது வைரலாகி வருகிறது!