ஒரு போட்டி கூட விளையாடாத வீரர்களுக்கும் ரூ.5 கோடி| ரூ.125 கோடி பரிசுத் தொகை-யார், யாருக்கு எவ்வளவு?

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இத்தொகை யார் யாருக்கு எவ்வளவு அளிக்கப்படுகிறது என அதுகுறித்து தகவல் வெளியாகி உள்ளது.
indian team
indian teamx page
Published on

17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நாடு திரும்பியதும் டெல்லி மற்றும் மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரரான சேவாக், பிசிசிஐ அளித்துள்ள பரிசுத்தொகை வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் சேர்த்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். ஆயினும், யார் யாருக்கு எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. தற்போது அதுகுறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: இந்து மதத்தை ராகுல் அவமதிக்கவில்லை” - மக்களவையில் ஆற்றிய உரை குறித்து அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி!

indian team
கடைசி வரை திக்.. திக்; ஆட்டத்தை மாற்றிய பும்ரா, ஹர்திக்கின் அபார பந்துவீச்சு - இந்திய அணி சாம்பியன்!

அதன்படி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கு தலா ரூ.5 கோடி அளிக்கப்படவுள்ளது. அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடி பரிசு அளிக்கப்படவுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்று ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்புகிடைக்காத சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், சாஹல் ஆகியோருக்கும் தலா ரூ.5 கோடி வழங்கப்படுகிறது.

இதன்பின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி அளிக்கப்படவுள்ளது.

அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவுக்கு தலா 1 கோடி ரூபாயும், ரிங்கு சிங், கலீல் அகமது, சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் போன்ற ரிசர்வ் வீரர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பரிசு வழங்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதுமட்டுமல்லாது ஐசிசி சார்பில் தனியாக ஏற்கனவே ரூ20.42 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 90S கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்... ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு.. சாதனைகளும் வாழ்க்கைப் பயணமும்..

indian team
குலுங்கியது மும்பை| ஹர்திக் பாண்டியாவிற்கு நன்றி சொன்ன ரோகித் சர்மா.. பாராட்டு மழையில் இந்திய அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com