16 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்.. 7 ஓவராக நடந்த போட்டியில் AUS அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக 7 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியாx
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது.

aus vs pak
aus vs pakcricinfo

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தரமான வேகப்பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை 204/8, 163 மற்றும் 140 ரன்களில் ஆல்அவுட் செய்து தொடரை 2-1 என கைப்பற்றியது.

தொடர் நாயகன் விருது வாங்கிய ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானை 22 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். 2002-க்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் பாகிஸ்தான் ஒருநாள் தொடரை கைப்பற்றுவது இதுவே முதல்முறை.

pak vs aus
pak vs ausweb

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா
”இந்திய அணி ஏன் பாகிஸ்தானில் விளையாட மறுக்கிறது?” - ஐசிசி இடம் விளக்கம் கேட்கும் பாகிஸ்தான்!

7 ஓவர்களாக நடத்தப்பட்ட போட்டி..

பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

பின்னர் தொடங்கப்பட்ட போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒருநாள் தொடரில் சொதப்பிய க்ளென் மேக்ஸ்வெல் இருந்த கோவத்தை எல்லாம் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி பதிலடி கொடுத்தார். 226 ஸ்டிரைக் ரேட்டில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்து 43 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவை 7 ஓவர் முடிவில் 93 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.

94 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீட்டுகட்டு போல விக்கெட்டை பறிகொடுத்தது. டாப் ஆர்டரில் விளையாடிய 6 வீரர்களும் ஓரிலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க 16 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான். 7 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா அணி.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா
சாம்பியன்ஸ் டிராபி|நிபந்தனையை ஏற்காவிட்டால் தொடர் தென்னாப்ரிக்காவுக்கு மாற்றம்? பாகிஸ்தானுக்கு செக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com