டி20 ஆசியக்கோப்பை| முதல் அரையிறுதியில் இலங்கையிடம் PAK A தோல்வி! 2வது SEMI-ல் IND A vs AFG A மோதல்!

2024 வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இலங்கை ஏ அணியிடம் பாகிஸ்தான் ஏ அணி தோல்வியை தழுவியது.
PAK A vs SL A
PAK A vs SL AACC
Published on

2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற்றுவருகிறது.

இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.

men's t20 emerging asia cup
men's t20 emerging asia cup

இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவில், குரூப் ஏ-ல் “ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் மற்றும் இலங்கை” அணிகளும், குரூப் பி-ல் “இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன்” முதலிய அணிகளும் இடம்பெற்றன.

ஒவ்வொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளில் ஒவ்வொரு அணி, மற்ற அணிகளை எதிர்கொண்டு மூன்று குரூப் போட்டிகளில் மோதும். இதில் பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.

ind a - pak a
ind a - pak aweb

இந்நிலையில் பரபரப்பாக நடந்துவந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், ”இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ” முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

PAK A vs SL A
வெளியே போவென சைகை காட்டிய பாக். பவுலர்.. முறைத்த அபிஷேக் சர்மா! அனல்பறக்கும் IND A - PAK A ஆட்டம்!

முதல் அரையிறுதியில் இலங்கையிடம் தோற்ற பாகிஸ்தான்..

இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஓமனில் ஆல் அமெரெட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது.

ஆனால் எதற்கு பேட்டிங் தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் வகையில், தொடக்க வீரர் ஒமைர் யூசுஃபை தவிர வேறு எந்தவீரரும் சோபிக்கவில்லை. 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசிய ஒமைர் 46 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெளியேற, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை லெக் ஸ்பின்னர் துஷன் ஹேமந்தா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதற்குபிறகு 136 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை அணி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. அதிகபட்சமாக ஆஹன் விக்ரமசிங்கே 52 ரன்கள் அடித்தார்.

இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.

PAK A vs SL A
344 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே! 15 சிக்சர்கள் விளாசிய சிக்கந்தர் ராசா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com