MI தோல்வி | ரோகித், ஹர்திக் உள்ளிட்ட வீரர்களுடன் ஆலோசனை.. உரிமையாளர் சொன்ன சீக்ரெட்!

“நம் தோல்வி குறித்து மீண்டும் சிந்திப்போம்” என மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களிடம் அவ்வணியின் உரிமையாளரான நீதா அம்பானி நம்பிக்கை அளித்துள்ளார்.
ரோகித், நீடா அம்பானி, ரோகித்
ரோகித், நீடா அம்பானி, ரோகித்ட்விட்டர்
Published on

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேநேரத்தில் புள்ளிப் பட்டியலில் 10வது இடம்பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்று. ஏற்கெனவே அவ்வணி ரசிகர்களுக்கும் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. அவரை, அந்த அணியின் கேப்டனாகக்கூட மதிக்காமல் தொடர்ந்து வெறுப்பேற்றினர். அதற்குத் தகுந்தாற்போலவே, அவருடைய செயல்பாடுகளும் இருந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், மும்பை அணியின் உரிமையாளரான நீதா அம்பானி, அணியின் ஏமாற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், வீரர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தந்துள்ளார். இதுகுறித்து அணியின் மூத்த வீரர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் அவர்.

இதையும் படிக்க: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு! இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

ரோகித், நீடா அம்பானி, ரோகித்
ரோகித், பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார்? தொடர்ந்து உடையும் மும்பை அணி! என்ன நடந்தது?

அப்போது அவர், “இது நம் அனைவருக்குமான ஏமாற்றம். நாம் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை. நான் மும்பை அணியின் உரிமையாளர் மட்டுமல்ல, எல்லோரையும்போல நானும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரிய ரசிகை. அவ்வணியின் ஜெர்சியை அணிவது மிகப்பெரிய கௌரவம். அவ்வணியுடன் இணைந்திருப்பதை மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். எனினும், நம் தோல்வி குறித்து மீண்டும் சிந்திப்போம்” என அவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.

தவிர, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களும் டி20 உலகக்கோப்பையில் விளையாட இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் உற்சாகத்தையும் குறிப்பிட்டு நீதா அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார். மூத்த வீரர்களை அழைத்து அவர் ஆலோசனை நடத்தியிருப்பதில், அடுத்த தடவை அவ்வணியில் ஏதாவது மாற்றம் நிகழலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிக்க: CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!

ரோகித், நீடா அம்பானி, ரோகித்
மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com