ஒவ்வொரு சிக்சரும் ஆணி அடிச்ச மாதிரி... கெயிலின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய பூரன்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
பூரன், கெயில்
பூரன், கெயில்pt web
Published on

டி20 உலகக்கோப்பை தொடரில் டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (Daren Sammy National Cricket Stadium) நடந்த 40 ஆவது போட்டியில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டான் கிங் 7 ரன்களில் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 98 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப், கேப்டன் ரோவ்மென் போவெல் ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்களை அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட அதிக ரன் ஆகும்.

பூரன், கெயில்
சாகித்ய அகடாமி ‘யுவ புராஸ்கர்’ விருதை வென்ற தையல்காரர்.. தடைகளை தாண்டி சாதித்த மராத்தி எழுத்தாளர்!

மேற்கிந்திய தீவுகள் அணி பவர்ப்ளேவுக்குள் மட்டும் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது. இது உலகக்கோப்பையின் பவர்ளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். நேற்றைய போட்டியில் மட்டும் நிக்கோலஸ் பூரன் 8 சிக்சர்களை அடித்துள்ளார்.

இதன்மூலம் அவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்காக கிறிஸ் கெயில் அடித்த 124 சிக்சர்களே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் பூரன் 8 சிக்சர்களை அடித்ததன் மூலம், மொத்தமாக 128 சிகசர்களை அடித்து கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

பூரன், கெயில்
WI vs AFG | ஒரே ஓவரில் 36 ரன்கள்! ஆப்கானை அலறவிட்டு 4 சாதனை பட்டியலில் இடம்பிடித்த நிக்கோலஸ் பூரன்!

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் பறிக்கொடுத்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹீம் ஜார்டன் 38 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மெக்காய் 3 விக்கெட்களையும், ஹூசைன் மோதி (Motie) தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனான நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.

பூரன், கெயில்
IND-ன் 28 வருட கோப்பை கனவை நிறைவேற்றியவர்.. யார் இந்த கேரி கிர்ஸ்டன்? ஜாம்பவானின் 5 அரிதான சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com