வதந்திக்கு முற்றுப்புள்ளி? ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷா வெளியிட்ட வீடியோ!

குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா, நடாஷா
ஹர்திக் பாண்டியா, நடாஷாஎக்ஸ் தளம்
Published on

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதற்குக் காரணமான வீரர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். அவர் கடைசிக் கட்டத்தில் நேர்த்தியாக பந்துவீசி முக்கியமான இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியது இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது. இதை கேப்டன் ரோகித் சர்மாவே மனந்திறந்து பாராட்டி வருகிறார். அதுபோல் ரசிகர்களும் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், குடும்ப வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது குணாதிசயங்களையோ எப்படி நாம் இவ்வளவு விரைவாகத் தீர்மானித்து விடுகிறோம்? நம் குணாதிசயங்களை மீறி யாராவது ஒருவர் செயல்பட்டால், எந்தவோர் அனுதாபமும் இன்றி அவர்களை உடனே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் மனிதர்கள் குறித்துத் தீர்மானித்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சற்றுப் பொறுமையாக எதையும் அணுகுவது நல்லது" என அதில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:திருப்பதி கோயிலில் பிராங்க் வீடியோ| மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. தேவஸ்தானம் கண்டனம்

ஹர்திக் பாண்டியா, நடாஷா
”ஹர்திக்கும் ஒரு மனிதன்தான்” - உருகிய க்ருணால் பாண்டியா.. குடும்ப கொண்டாட்டத்தில் இடம்பெறாத நடாஷா!

முன்னதாக, ஹர்திக் பாண்டியாவிற்கும் அவருடைய மனைவியான நடாஷாவிற்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகின. அதற்கு உதாரணமாய், இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய வலைதளங்களில் இருந்து நீக்கியதும், அதுபோல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. எனினும், விவாகரத்து / பிரிந்து வாழ்தல் என எதையும் ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ உறுதிப்படுத்தவில்லை.

என்றாலும், இந்த செய்தி வைரலான நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் மீண்டும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதனால், அவர்களுக்கு எந்த விரிசலும் இல்லை என ஊடகங்களே கருத்து தெரிவித்தன.

ஆயினும், உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், நடாஷா கலந்துகொள்ளவில்லை. அவர்களது மகனும், க்ருணால் பாண்டியாவின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். இதனால், ஹர்திக் மற்றும் நடாஷா பற்றிய பேச்சுகள் மீண்டும் விமர்சனமானது. இந்த நிலையில்தான் நடாஷா அவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

ஹர்திக் பாண்டியா, நடாஷா
குழந்தைகளுடன் க்ருணால் பாண்டியா.. இன்ஸ்டா பதிவுக்கு ஹர்திக் மனைவி புன்னகை எமோஜி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com