அன்று RCB.. இன்று KKR.. டாஸ் போடுவதில் ஏமாற்று வேலை? மீண்டும் சர்ச்சையை சந்தித்த மும்பை அணி!

நடப்பு ஐபிஎல் தொடரில் டாஸில் ஏமாற்று வேலைசெய்ததாக மீண்டும் மும்பை அணி மீது சர்ச்சை எழுந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாட்விட்டர்
Published on

5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருக்கிறது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. அவரை, அந்த அணியின் கேப்டனாகக்கூட மதிக்காமல் தொடர்ந்து வெறுப்பேற்றி வருகின்றனர். அதற்குத் தகுந்தாற்போலவே, அவருடைய செயல்பாடுகளும் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்ய நிறுத்துவது, பவுலிங்கில் பும்ராவுக்கு முன்னுரிமை அளிக்காதது, ஓவர்களைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காமல் அணியையே அபராதத்துக்கு ஆளாக்கியது என அவரைச் சுற்றி பிரச்னைகள் வெடித்தவண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி டாஸில் ஏமாற்று வேலை செய்ததாக மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

இதையும் படிக்க: புதிய 100 ரூபாய் தாளில் இந்திய பகுதிகள்.. நேபாள அரசின் புதிய வரைபடத்தால் சர்ச்சை!

ஹர்திக் பாண்டியா
2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பையும் கொல்கத்தாவும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 169 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை 145 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து, கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மும்பை அணியின் அடுத்தசுற்று வாய்ப்பையும் தகர்த்தது. முன்னதாக, இந்தப் போட்டியின்போது மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, காயினை மேலே சுண்டினார். ஆனால், மேட்ச் ரெஃப்ரி, அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்துவிட்டார். அதாவது, கேமரா வந்து கவர் செய்வதற்குள்ளேயே ரெஃப்ரி அந்த காயினை எடுத்துவிட்டார்.

ஏற்கெனவே ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என கீழே விழுந்த காயினை கேமராவின் மூலம் நேரலையில் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. மற்ற போட்டிகளில் எல்லாம் டாஸுக்குப் பயன்படுத்திய காயின் நேரலையில் காட்டப்பட்ட நிலையில், மும்பை அணி விளையாடிய நேற்றைய போட்டியில் காட்டவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாஸில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி வருகிறார்கள். ஏற்கெனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி இதேபோன்று டாஸில் ஏமாற்று வேலைசெய்ததாக ஒருமுறை சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”28 சதவிகிதம் ஜிஎஸ்டி எதற்கு?” - மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராஜீவ் பஜாஜ்!

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா மீது தொடரும் விமர்சனங்கள். கேப்டனாகவும், ஆல்ரவுண்டராகவும் தொடரும் தடுமாற்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com