ஐபிஎல் 2023 ஆம் ஆண்டின் Play Off சுற்றுக்குள் 3ஆவது அணியாக 16 புள்ளிகளுடன் நுழைந்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டி நேற்று கொல்கத்தா - லக்னோ அணிகளிடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே லக்னோ அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும என்ற நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
இதன்பின்னர் 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் - வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடினர். பின்பு கொல்கத்தா ரன்களை சேர்த்தபோதும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ஒவ்வொன்றாக இழந்தது. ஆனால் ஒருபக்கம் ரிங்கு சிங் பிரமாதமாக விளையாடிக்கொண்டு இருந்தார்.
கடைசி ஒருவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் ரிங்கு சிங் தயவால் 20 ரன்களை கொல்கத்தா எடுத்தது. இதனால் 1 ரன்னில் தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று 3 ஆவது அணியாக லக்னோ Play Off சுற்றுக்குள் நுழைந்தது. இந்நிலையில் இன்று பெங்களூரு - மும்பை அணிகளில் ஏதேனும் ஓர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். ஐபிஎல் 2023 தொடரின் 70வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த சீசனின் கடைசி லீக் போட்டியாக அமைந்திருக்கும் இப்போட்டி, பிளேஆஃப்-க்கு தகுதிபெற பெங்களூருக்கு முக்கியமானதாக இருக்கும்.
இதேபோல 69வது லீக் போட்டி மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையே இன்றுதான் நடைபெறுகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி மும்பை பிளே ஆப்-க்குள் நுழைய முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும் மும்பை இப்போட்டியில் ஹைதரபாத் அணியை வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியை பெறுவதோடு, நெட் ரன்ரேட்டையும் அதிகரிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் பிளேஆப்-க்குள் நுழைய முடியும். ஏனெனில் பெங்களூரு அணி 0.180 நெட் ரன்ரேட் பெற்று மும்பையைவிட முன்னிலை வகிக்கிறது.
இதனால் மும்பை - பெங்களூரு என இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற கடுமையாக போராடும்.