கிங் கோலி.. சிக்சர் என்றாலும், ரன்கள் என்றாலும் கோலியே முதலிடம்...

2024 ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் மற்றும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி முதலிடம்
கோலி
கோலிpt web
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில், பிளேஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக நுழையப்போவது சென்னையா அல்லது பெங்களூருவா என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதைத் தீர்மானிக்கும் போட்டி, இன்று பெங்களூருவில் தொடங்கியது.

முன்னதாக, டாஸ் ஜெயித்த சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக கிங் விராட் கோலியும் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய இருவரும் 3 ஓவர்களிலேயே 31 ரன்களை எடுத்தனர்.

மழை வந்ததும் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்டம் 8.25 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அடுத்த சில ஓவர்களிலேயே மீண்டும் அதிரடிக்கு திரும்பினர் கோலி மற்றும் டுப்ளசிஸ்.

கோலி
நேருக்கு நேர்... தோனிக்கு கடைசிப் போட்டியா? பதற்றத்தில் பெங்களூரு, சென்னை ரசிகர்கள்

அதிரடியாக ஆடிய கோலி 9.4 ஓவர்களில் 47 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நடப்பு சீசனில் அதிக சிக்சர்களை அடித்தவர்களது பட்டியலில் கோலி 37 சிக்சர்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார். 36 சிக்சர்களை அடித்து இரண்டாவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் உள்ளார்.

அதுமட்டுமின்றி நடப்பு தொடரில் 700 ரன்களைக் கடந்தார் விராட் கோலி. 14 போட்டிகளில் 708 ரன்களைக் குவித்து, சீசனில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

கோலி
CSK Vs RCB| டாஸ் ஜெயித்த சந்தோஷத்தில் சென்னை.. RCBயின் கனவைக் கலைத்த மழை.. கவலையில் வீரர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com