ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக டிசம்பரில் மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக அந்தந்த அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதியன்று அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
ஒவ்வொரு அணியின் தக்கவைத்த வீரர்கள் பட்டியலின் படி,
CSK - 5 வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் - ரூ.18 கோடி
ரவீந்திர ஜடேஜா - ரூ.18 கோடி
மதீஷா பத்திரனா - ரூ. 13 கோடி
ஷிவம் துபே - ரூ. 12 கோடி
MS தோனி - ரூ. 4 கோடி
MI - 5 வீரர்கள்
ஜஸ்பிரித் பும்ரா - ரூ.18 கோடி
சூர்யகுமார் யாதவ் - ரூ.16.35 கோடி
ஹர்திக் பாண்டியா - ரூ.16.35 கோடி
ரோகித் சர்மா - ரூ.16.30 கோடி
திலக் வர்மா - ரூ.8 கோடி
RCB - 3 வீரர்கள்
விராட் கோலி - ரூ.21 கோடி
ரஜத் படிதார் - ரூ.11 கோடி
யாஷ் தயாள் - ரூ.5 கோடி
KKR - 6 வீரர்கள்
ரிங்கு சிங் - ரூ.13 கோடி
வருண் சக்ரவர்த்தி - ரூ.12 கோடி
சுனில் நரைன் - ரூ.12 கோடி
ஆண்ட்ரே ரசல் - ரூ.12 கோடி
ஹர்ஷித் ராணா - ரூ.4 கோடி
ரமன்தீப் சிங் - ரூ.4 கோடி
RR - 6 வீரர்கள்
சஞ்சு சாம்சன் - ரூ.18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரூ.18 கோடி
ரியான் பராக் - ரூ.14 கோடி
துருவ் ஜுரேல் - ரூ.14 கோடி
ஷிம்ரன் ஹெட்மயர் - ரூ.11 கோடி
சந்தீப் சர்மா - ரூ.4 கோடி
SRH - 5 வீரர்கள்
ஹென்ரிச் கிளாசென் - ரூ.23 கோடி
பாட் கம்மின்ஸ் - ரூ.18 கோடி
அபிஷேக் சர்மா - ரூ.14 கோடி
டிராவிஸ் ஹெட் - ரூ.14 கோடி
நிதிஷ் குமார் ரெட்டி - ரூ.6 கோடி
GT - 5 வீரர்கள்
ரஷித் கான் - ரூ.18 கோடி
சுப்மன் கில் - ரூ.16.50 கோடி
சாய் சுதர்சன் - ரூ.8.50 கோடி
ராகுல் தெவாடியா - ரூ.4 கோடி
ஷாருக் கான் - ரூ.4 கோடி
DC - 4 வீரர்கள்
அக்சர் படேல் - ரூ.16.50 கோடி
குல்தீப் யாதவ் - ரூ.13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - ரூ.10 கோடி
அபிஷேக் போரல் - ரூ. 4 கோடி
LSG - 5 வீரர்கள்
நிக்கோலஸ் பூரன் - ரூ.21 கோடி
ரவி பிஷ்னோய் - ரூ.11 கோடி
மயங்க் யாதவ் - ரூ.11 கோடி
மொசின் கான் - ரூ.4 கோடி
ஆயுஷ் பதோனி - ரூ.4 கோடி
PBKS - 2 வீரர்கள்
ஷஷாங்க் சிங் - ரூ.5.5 கோடி
பிரப்சிம்ரன் சிங் - ரூ.4 கோடி
2025 ஐபிஎல்லுக்கான தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலில் ஆச்சரியப்படுத்தும் விதமாக சில அணிகளின் கேப்டன்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுல் மற்றும் 2024 ஐபிஎல் தொடரை வென்று கொடுத்த கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று முக்கியமான வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் அணியை இறுதிப்போட்டிவரை வழிநடத்தியது மட்டுமில்லாமல், இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டது குழப்பமான ஒரு முடிவாகவே பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டனாக இருந்தபோதும் கூட எதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் கொல்கத்தா அணியின் சிஇஒ, Retention என்பது ஒரு பக்கத்தினர் மட்டுமே எடுக்கும் முடிவல்ல என்றும், எங்களுடைய அணியில் தொடக்கத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் நம்பர்.1 வீரராக பட்டியலிடப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் RevSportz உடனான உரையாடலில் பேசும்போது, “வீரர்களை தக்கவைப்பதின் அடிப்படை என்ன, இரண்டு தரப்பினரும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் விஷயம் என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்துகொள்ளவதில்லை. இது ஒருதலைப்பட்சமான அணி உரிமையின் முடிவு மட்டுமல்ல. ஒரு உரிமையாளரும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டும், வீரரும் அவருக்கான சில எண்ணங்களில் உறுதியாக இருப்பார். சில நேரங்களில் அந்த ஒப்பந்தம் பல்வேறு காரணிகளால் நடக்காமல் போகிறது. பணம் அல்லது யாரோ ஒருவர் தங்கள் மதிப்பை மேலும் சோதிக்க விரும்புகிறார்கள். அது இறுதியில் ஒரு முடிவை பாதிக்கிறது. ஆனால் இந்த காரணங்களை எல்லாம் கடந்து ஸ்ரேயாஸ் ஐயர் எங்களின் முதல் தக்கவைக்கும் வீரராக இருந்தார்”என்று மைசூர் ரெவ் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
மேலும் அவரின் காயத்திற்கு பிறகான கம்பேக் குறித்து பேசிய அவர்,“அவர் எங்களுடைய கேப்டன், அந்தத் தலைமையைச் சுற்றிதான் நாம் அணியை கட்டமைக்க வேண்டும், அதற்காகவே 2022-ம் ஆண்டு அவரை அணிக்குள் எடுத்துவந்தோம். துரதிர்ஷ்டவசமாக, அவர் 2023-ல் காயமடைந்தார். ஆனால் காயத்திலிருந்து திரும்பி வந்த தருணத்தில், அவருக்கும் மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. எப்போதும் அவர் அணியில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார், ஒரு அற்புதமான வேலை செய்தார், கோப்பையை வென்றோம். அவருடன் தனிப்பட்ட உறவையும் அனுபவித்தேன். ஆனால் நாளின் முடிவில், மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு எது சிறந்தது மற்றும் செல்ல விரும்பும் திசையை தீர்மானிக்க வேண்டும். அதன்படியே முடிவுகள் அமைகின்றன” என்று மைசூர் மேலும் கூறியுள்ளார்.