கடைசிப்போட்டி.. ஓய்வுபெறும் ஜேம்ஸ் ஆண்டர்சனை கௌரவித்த இங்கிலாந்து அணி! விண்ணை பிளந்த கரகோஷம்!

ஆண்டசர்னுக்கு இது கடைசிப் போட்டி என்பதால் அவரை மரியாதையுடன் நடத்த இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது.
ஆண்டர்சன்
ஆண்டர்சன்எக்ஸ் தளம்
Published on

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அந்த வகையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கான முதல் போட்டி, இன்று (ஜூலை 10) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுபெற உள்ளார்.

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு அதிக சர்வதேச டெஸ்ட் போட்டியில் (188) விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்ற ஆண்டர்சன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் (700) என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.

இதையும் படிக்க: பெரு|மலையேறிய அமெரிக்க வீரர் பனியில் சிக்கி மாயம்; மம்மி ஆக உறைந்த உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

ஆண்டர்சன்
ஐசிசி தரவரிசை: 87 வருட சாதனை முறியடிப்பு.. 40 வயதில் நம்பர் 1 பந்துவீச்சாளரான ஆண்டர்சன்!

முன்னதாக ஓய்வு குறித்துப் பேசிய ஆண்டர்சன், “நான் இன்னமும் நல்ல உடல்தகுதியுடன் எப்போதும்போலவே பந்துவீசுகிறேன். நான் இன்னமும் விளையாட முடியுமென நினைக்கிறேன். ஆனால், எனக்கு ஓய்வுபெற வேண்டிய நாள் ஒன்று வருமென்பதையும் அறிவேன். அதனால் அந்த முடிவை தற்போதே ஏற்றுக்கொள்கிறேன்.

இதைச் சொல்லுவதற்கு கடினமாக இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை. கடைசி வாரம் கவுன்டி கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் எடுத்தேன். இன்னமும் என்னால் நன்றாக பந்துவீச முடிகிறது. தற்போது அழுவதைவிட நன்றாக விளையாடி போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆண்டசர்னுக்கு இது கடைசிப் போட்டி என்பதால் அவரை மரியாதையுடன் நடத்த இங்கிலாந்து அணி முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவருக்கு இன்றைய போட்டியில் தேசிய கீதம் பாடுவதற்காக மைதானத்திற்குள் செல்லும் அவர் முதல் வீரராக சென்றார். மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து கரகோஷம் எழுப்பினர். ரசிகர்களின் உற்சாகம் விண்ணை பிளந்தது. மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் குடும்பத்தினர் போட்டிக்கான பெல் மணியை அடித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ஹிஜாப் அணிய மறுத்த பெண்கள்.. துருக்கியின் விமான நிறுவன அலுவலகத்தை மூடிய ஈரான்!

ஆண்டர்சன்
9வது முறையாக கேன் வில்லியம்சன் அவுட் செய்து 40 வயதில் புது சாதனையை நோக்கி ஓடும் ஆண்டர்சன்!

கடந்த காலங்களில் ஜூனியர் வீரர்கள் கேப்டன்ஷிப் ஏற்கும் நிலையில், அப்போது அணியில் அங்கம் வகிக்கும் சீனியர் வீரர்களுக்கு, ஓய்வுபெறப் போகும் கடைசிப் போட்டியன்று இதேபோல் மரியாதை கொடுப்பார்கள். ஆனால், தற்போது அப்படி நடைபெறுவதில்லை. மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் பல வீரர்கள் அப்படியே ஓய்வு முடிவை அறிவித்துவிடுகின்றனர். ஆனால், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சீனியருக்கான மரியாதையை அளித்துள்ளார்.

இதேபோல் தோனியும் செளரவ் கங்குலிக்குச் செய்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. அந்த தொடருடன் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அந்தப் போட்டியின் கடைசிப் பகுதியில் இந்திய வீரர்கள் அறையில் இருந்து வெளியே வந்து, இருபுறமும் நின்று கங்குலிக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது கேப்டனாக இருந்த தோனி, கங்குலியை கேப்டன்ஷிப் ஏற்குமாறு கூறினார். கடைசி நேரம் என்பதால் இந்திய அணியை கங்குலி வெற்றிக்கு அழைத்துச் செல்லும் வகையில் திட்டமிட்டார் தோனி. ஆனால், கங்குலி அதை முதலில் ஏற்கவில்லை. ஆனாலும், தோனி இடைவிடாமல் கங்குலியை கேப்டன்ஷிப்பை ஏற்குமாறு வற்புறுத்தினார். இதையடுத்து கங்குலி கேப்டனாக செயல்பட ஒப்புக்கொண்டார். சில ஓவர்களுக்கு மட்டுமே அவர் கேப்டனாக இருந்தார். இதுகுறித்து பின்னாளில் கங்குலி தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால், கங்குலில் கேப்டனாக இருந்த காலத்தில்தான் தோனி அணிக்குள் அழைத்து வரப்பட்டார்.

தோனி வழங்கியது போல் இல்லையென்றாலும் தற்போது பென் ஸ்டோக்ஸும் அதுபோன்ற ஒரு மரியாதையை ஆண்டர்சனுக்கு வழங்கியுள்ளார்.

இதையும் படிக்க: சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!

ஆண்டர்சன்
103வது முறையாக 'நாட் அவுட்’ ஆன ஆண்டர்சன்.. கடைசி பந்தில் முகத்தை மூடிய பென் ஸ்டோக்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அட்கின்ஸ்சன் 7 விக்கெட்டுகள் சாய்க்க, ஆண்டர்சன் ஒரு விக்கெட் மட்டும் எடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com