போட்டியின் முதல் பந்தில் 13 ரன்கள்.. ஜெய்ஸ்வால் படைத்த உலக சாதனை! இந்தியா 167 ரன்கள் குவிப்பு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் 167 ரன்களை குவித்துள்ளது இந்திய அணி.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்x
Published on

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக்கோப்பையை வென்று உலக சாம்பியன் அணியாக சென்ற இந்திய அணிக்கு, முதல் போட்டியில் 115 ரன்களை அடிக்கவிடாமல் டிஃபண்ட் செய்து யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வரலாற்று தோல்வியை வழங்கியது ஜிம்பாப்வே அணி.

முதல் போட்டிக்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய அணி அடுத்த 3 போட்டிகளையும் வரிசையாக வென்று 3-1 என தொடரை கைப்பற்றி அசத்தியது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5வது டி20 போட்டியானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சஞ்சு சாம்சன்
’மிகவும் வலிக்கிறது’ கேன்சரால் தவிக்கும் சகவீரருக்காக நிதி திரட்டும் கபில்தேவ்! BCCI உதவ கோரிக்கை!

முதல் பந்தில் வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்!

கடைசி போட்டி என்பதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஷா பந்துவீச்சை தேர்வுசெய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்க, முதல் ஓவரை கேப்டன் சிக்கந்தர் ராஷா வீசினார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சராக பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் கெத்துக்காட்ட, அந்தபந்தை நோபாலாக வீசி மேலும் ஒரு வாய்ப்பை வழங்கினார் சிக்கந்தர். ஃப்ரீ ஹிட்டாக மீண்டும் வீசப்பட்ட முதல்பந்தை மறுபடியும் சிக்சருக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் ஒரே பந்தில் 12 ரன்களை பதிவுசெய்து மிரட்டினார்.

இதன்மூலம் ஒரு சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே 12 ரன்களை அடித்த முதல் வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் புதிய உலக சாதனை படைத்தார். ஆனால் அதிகநேரம் அவரை நிலைக்க விடாத சிக்கந்தர் ராஷா அதேஓவரில் அவரை வெளியேற்றி பழிதீர்த்தார்.

சஞ்சு சாம்சன்
’இதுபோல சுயநலமான வீரரை பார்த்ததில்லை..’ ஜெய்ஸ்வாலின் சதத்தை தடுத்த கில்? விளாசும் ரசிகர்கள்!

சஞ்சு சாம்சன் அரைசதம்.. 167 ரன்கள் குவித்த இந்தியா!

ஜெய்ஸ்வால் வெளியேற அடுத்தடுத்து சிறப்பாக பந்துவீசிய ஜிம்பாப்வே அணி கில்லை 13 ரன்னிலும், அபிஷேக் சர்மாவை 14 ரன்னிலும் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தது. அதற்குபிறகு கைக்கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் ரன்களை எடுத்துவந்தனர். ரியாக் பராக் 22 ரன்களில் வெளியேற, ஒருமுனையில் 1 பவுண்டரி 4 சிக்சர்கள் என துவம்சம் செய்த சஞ்சு சாம்சன் அரைசதமடித்து அசத்தினார்.

58 ரன்னில் சஞ்சு வெளியேற, இறுதியாக வந்த ஷிவம் துபே 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை கட்டினார். துபே 22 ரன்கள் அடிக்க 167 ரன்களை எட்டியது இந்திய அணி.

சஞ்சு சாம்சன்
’கம்பீர் வந்துட்டாரு; இனி இணக்கமான கிரிக்கெட்டுக்குலாம் இடமில்லை’ உலகஅணிகளை எச்சரித்த முன். வீரர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com