மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது.. யாருமே கேப்டனை மதிப்பது இல்லை! Hardik-ன் நிம்மதியை சிதைத்த MI!

மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்கள் யாரும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மதிக்கவில்லை, ஒரு அணியாக செயல்படுவதில் அவர்கள் கோட்டைவிட்டதாக முன்னாள் இந்திய அணி வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியாx
Published on

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா என நடப்பு ஐபிஎல் தொடரானது பல பரபரப்பான சம்பவங்களால் களைகட்டி உள்ளது. பீக் ஆஃப் தி ஷோ-வாக ஹர்திக் பாண்டியா-ரோகித் சர்மா இடையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சி மாற்றம் இருந்துவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறது.

குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக மாறியபோது, ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் ஹர்திக் மீது அதிகப்படியான வெறுப்பை வெளிப்படுத்தினர். ஆனால் பல முன்னாள் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மீது எந்தத்தவறும் இல்லை, இதுமுழுக்க முழுக்க மும்பை அணி நிர்வாகத்தின் தவறுதான் என MI அணியை குற்றஞ்சாட்டினர். தற்போது மும்பை அணி நிர்வாகத்தின் தவறு நிரூபனமாகியுள்ளது.

ஹர்திக் பாண்டியா
“ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை; அது எங்களுக்கே கடினமான முடிவு” - அஜித் அகர்கர் வருத்தம்

ஹர்திக் பாண்டியாவின் நிம்மதியை குலைத்த MI!

மும்பை அணியை பொறுத்தவரையில், காயத்தால் அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஆதரிக்காத MI அணி நிர்வாகம் 2022 ஐபிஎல் ஏலத்தில் தக்கவைக்காமல் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கிரன் பொல்லார்டு முதலிய 4 வீரர்களை மட்டும் தக்கவைக்கும் முடிவுக்கு சென்றது மும்பை.

அதற்கு பிறகு குஜராத் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா, அந்த அணியை முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பைக்கு அழைத்துச்சென்று மகுடம் சூடினார். அதுமட்டுமல்லாமல் அடுத்த ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டிவரை எடுத்துச்சென்று சிறந்த கேப்டனாக விளங்கினார்.

Hardik Pandya
Hardik Pandya

இதன்காரணமாக ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணிக்கு கொண்டுவர நினைத்த மும்பை அணி நிர்வாகம், 5 கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டன் பதிவியிலிருந்து நீக்கி அந்த பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது.

மும்பை அணியின் இந்த செயலுக்கு பலிகடாவாக மாறியது என்னமோ ஹர்திக் பாண்டியா மட்டும்தான். ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்த பிறகு மும்பை அணியில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக ஒரு குழு உருவானதாக கூறப்பட்டது, அந்தக் குழு ஹர்திக் பாண்டியாவின் முடிவுக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல், ரோகித் சர்மாவின் முடிவுகளை பின்பற்றுவதாக தகவல் வெளியானது.

mumbai indians
mumbai indianspt web

அப்படி எதுவும் நடக்கவில்லை என மும்பை அணி கூறினாலும், களத்தில் அனைத்து வீரர்களும் ஹர்திக் பாண்டியா கூறுவதை கேட்காமல் ரோகித் சர்மாவின் கட்டளையைதான் பின்பற்றினர். இது பலமுறை பலபோட்டிகளில் அரங்கேறியது. ஹர்திக் பாண்டியா பலமுறை வீரர்களிடம் பேசவந்து, பின்னர் அவர்கள் மதிக்காததால் பின்வாங்கியதை பார்க்கமுடிந்தது.

hardik pandya
hardik pandya

ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது, ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது, ஆல்ரவுண்டரான காம்ரான் க்ரீனை வெளியேற்றியது என்ற மும்பை அணியின் மூன்று மோசமான முடிவுகளின் தாக்கத்தால், தற்போது 11 போட்டிகளில் 8-ல் தோற்றிக்கும் மும்பை அணி கிட்டத்தட்ட நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு பலர் ஹர்திக் பாண்டியாவை குற்றஞ்சாட்டினாலும், இந்த மோசமான நிலைக்கு முழு பொறுப்பேற்கும் இடத்தில் அணி நிர்வாகமே இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா
தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு உழைக்கணுமா? காலங்காலமா வஞ்சிக்கப்படுகிறோம்! பத்ரிநாத் ஆதங்கம்!

யாருமே ஹர்திக் பாண்டியாவை மதிப்பதில்லை!

மும்பை அணியின் மோசமான செயல்பாடு குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், “நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கதை முடிந்துவிட்டது. அவர்கள் பேப்பரில் சிறந்த அணியை கொண்டிருந்தாலும், களத்தில் ஒரு அணியாக செயல்படுவதில் கோட்டைவிட்டனர். ஹர்திக் பாண்டியாவின் சுமாரான கேப்டன்சி தோல்விக்கு ஒரு பெரிய காரணமாக மாறியது. அதற்கு முக்கிய காரணம் வீரர்கள் யாரும் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மதிக்கவில்லை, வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை மதிக்காததை களத்திலேயே பலமுறை நம்மாள் பார்க்கமுடிந்தது. ஒரு அணியாக நிர்வாகம் சரியாக செயல்படவில்லை, இதை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நிர்வாகத்திடமே உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

மும்பை அணியிலிருந்து 4 வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாகியுள்ள நிலையில், ஐபிஎல்லில் ஏற்பட்ட மனப்பிளவு உலகக்கோப்பையில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்ற கவலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா
‘3 ஐபிஎல் அணியிலிருந்து 12 வீரர்கள் தேர்வு..’ ஓரங்கட்டப்பட்ட 2 அணி! WC சென்ற IPL அணி வீரர்கள் யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com