IPL 2024 | டிக்கெட் கிடைக்காமல் திண்டாடும் ரசிகர்கள் - ஆன்லைன் கள்ளச்சந்தையா? CSK விளக்கம்!

ஐ.பி.எல் திருவிழா நெருங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே, ஆர்.சி.பி மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் புலம்புகின்றனர். இதற்கான காரணம் என்ன? இந்த செய்தி தொகுப்பில் அலசலாம்...
சிஎஸ்கே
சிஎஸ்கேட்விட்டர்
Published on

செய்தியாளர்: சந்தானம்

ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி என்பதால் ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதை தடுக்க இணையத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெற்றது.

சிஎஸ்கே
சென்னையில் நடக்கும் IPL போட்டிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை? CSK-வின் திட்டம் என்ன?

பெரும்பாலன ரசிகர்கள் டிக்கெட் வாங்க முயற்சித்த போதும் பலருக்கு டிக்கெட்கள் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.

RCB
RCBcricinfo

டிக்கெட் கிடைப்பதில் உள்ள சிக்கல் குறித்து சி.எஸ்.கே அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கும் விளக்கம் என்னவென்று பார்த்தால் “35,000 பார்வையாளர்கள் அமரக் கூடிய சேப்பாக்கம் மைதானத்தில், விற்பனைக்கு வரும் டிக்கெட்கள் எண்ணிக்கை வெறும் 12,000 முதல் 15,000 வரை மட்டும்தான். இதன் காரணமாகவே டிக்கெட்கள் பல ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை” என்பதுதான்.

சிஎஸ்கே
”இதுக்கு ஏன் ரசிகர்களை ஏமாத்துறீங்க?” - டிக்கெட் கிடைக்காத நிலையில் CSK CEO பேசிய வீடியோ வைரல்!

இந்த இடத்தில் மற்ற இருக்கைகளுக்கான டிக்கெட்கள் என்னவாயிற்று என்ற கேள்வி எழத்தான் செய்யும். அண்ணா பெவிலியன், எம்.சி.சி. பெவிலியன் சேர்த்து 11 கேலரிகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தில், எம்.சி.சி. பெவிலியனில் மெட்ராஸ் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுபோக ஐ.பி.எல். தொடரை பொறுத்தவரை ஒரு மைதானத்தில் 25 சதவீத டிக்கெட்கள் ஸ்பான்சர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு F,G,H ஆகிய 3 கேலரிகள் ஒதுக்கப்படுகின்றன.

Chepauk
ChepaukPT Desk

இது மட்டுமின்றி சென்னை அணியின் ஸ்பான்சர்கள், BCCI, TNCA ஆகியவைகளின் ஸ்பான்சர்களுக்கும் 20 சதவீத டிக்கெட்கள் ஒதுக்கப்படுகின்றன. இதுபோக கிரிக்கெட் கிளப் அணிகள், அரசு அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. இவை எல்லாம் சேர்த்து 20,000 முதல் 23,000 டிக்கெட்கள் விற்பனைக்கு வருவதில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

கடந்த ஆண்டு கவுண்டர் மூலம் நேரடியாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அனைத்து டிக்கெட்களும் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதுவும் ஒரு வகையில் கள்ளச்சந்தை விற்பனை என ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

போட்டியை காண ஆர்வத்துடன் வரும் ரசிகர்களுக்கு அவர்களின் தேவையை அறிந்து சி.எஸ்.கே. நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com