IPL Auction | ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ், ராகுல்... யாரை கேப்டனாக குறிவைக்கப்போகிறது டெல்லி கேபிடல்ஸ்?

டெல்லி அணி ஏலத்தில் அவர்களின் தேவைகள் என்னென்ன, எந்தெந்த வீரர்களை அவர் குறிவைக்கலாம்... அவர்களின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்று அலசுவோம்.
dc
dcpt desk
Published on

ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் புதியதொரு டீமை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு தயாராகி வருகின்றன.

அந்த வகையில் டெல்லி அணிக்கும் பல முக்கிய தேவைகள் இருக்கின்றன. ஏலத்தில் அவர்களின் தேவைகள் என்னென்ன, எந்தெந்த வீரர்களை அவர் குறிவைக்கலாம்... அவர்களின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்று அலசுவோம்.

DC
DCTwitter

அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட நான்கு வீரர்களை தக்கவைத்த டெல்லி கேபிடல்ஸ்:

டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்துக்கு முன்பாக நான்கு வீரர்களை தக்கவைத்திருக்கிறது. ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல், ஸ்பின்னர் குல்தீப் யாதவ், பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், இளம் விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரல் ஆகியோர் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்காக அந்த அணி செலவளித்திருக்கும் தொகை 47 கோடி ரூபாய். அதனால் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு 73 கோடி ரூபாய் மீதமிருக்கும். போக, 2 RTM கார்டுகளை அந்த அணி பயன்படுத்த முடியும்.

dc
இந்தியாவிலேயே முதன்முறையாக... 24 மணி நேரமும் செயல்படும் ஆன்லைன் நீதிமன்றம்! எங்கே தெரியுமா?

இந்த ஏலத்தில் ஷ்ரேயாஸ், ராகுல், பண்ட் என 3 முன்னணி இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்:

என்னதான் 4 தரமான வீரர்களை தக்கவைத்திருந்தாலும், கேப்டன் ரிஷப் பண்ட்டை ரிலீஸ் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். ஒரு கேப்டனை, ஒரு கீப்பரை இழந்திருக்கிறது. அபிஷேக் பொரல் கீப்பர் இடத்தை நிரப்பிவிடுவார் என்பதால் அவர்களுக்கு ஒரு தலைவலியாவது குறையும். இப்போது கேப்டனுக்கு அவர்கள் எந்தப் பக்கம் தலைசாய்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஏலத்தில் ஷ்ரேயாஸ், ராகுல், பண்ட் என 3 முன்னணி இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். மூவருமே கேப்டனாக இருந்தவர்கள். மூவருமே டெல்லி கேபிடல்ஸுக்கு நல்ல தேர்வாக இருப்பார்கள்.

DC
DCpt desk

ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்:

ஆனால் யாரை டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் தேர்வு செய்யப்போகிறது என்பது முக்கியமான கேள்வி. ஏற்கெனவே பான்டிங் பஞ்சாப்புக்கு பண்ட்டை கொண்டுவர நினைப்பதாகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு தங்கள் மண்ணின் மைந்தன் கேஎல் ராகுலை மீண்டும் அழைத்துவர நினைப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போக, அந்த இரண்டு அணிகளுக்கும் டெல்லியை விட அதிக தொகை மீதமிருக்கின்றன. அந்த மூன்று வீரர்களிலும் கூட ஷ்ரேயாஸ் ஐயர் தான் குறைந்து விலைக்கு ஏலம் போவார். அதனால் அவரே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.

dc
முறைகேட்டில் ஈடுபட்டாரா கவுதம் அதானி? அமெரிக்காவில் வழக்குப்பதிவு!

ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் பக்கம் திரும்பலாம்:

அடுத்தது ஓப்பனர் பொசிஷனுக்கு அந்த அணி மீண்டும் ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் பக்கம் திரும்பலாம். கடந்த சீசன் சுமார் 200 ஸ்டிரைக் ரேட்டில் அவர் அதிரடி காட்டி ஆடியிருப்பதால் அவரை நிச்சயம் அந்த அணி RTM கொடுத்து தக்கவைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி அவர்கள் குறைந்தது 2 பேட்ஸ்மேன்களையாவது வாங்கவேண்டும். அவர்கள் மிடில் ஆர்டர் பெரும்பாலும் ரிஷப் பண்ட்டை நம்பியே இருந்திருக்கிறது. அதனால், அவர்கள் இம்முறை ஒரு சிறப்பான மிடில் ஆர்டரைக் கட்டமைக்கவேண்டும். ஏற்கெனவே ஸ்டப்ஸ் இருப்பதால் அந்த அணி இன்னொரு வெளிநாட்டு பேட்ஸ்மேனை வாங்குமா என்று தெரியவில்லை. இரண்டு வெளிநாட்டு பௌலர்கள் பிளேயிங் லெவனில் தேவையில்லை என்று நினைத்தால், ஒரு நல்ல வெளிநாட்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை வாங்கி, அவர்கள் பேட்டிங்கை பலப்படுத்தலாம்.

DC
DCRavi Choudhary, PTI

வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும்:

பந்துவீச்சைப் பொறுத்தவரை குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல் என ஏற்கெனவே 8 ஓவர்கள் ஸ்பின் உறுதியாகக் கிடைக்கும். அதனால் அவர்கள் வேகப்பந்துவீச்சில் கவனம் செலுத்தவேண்டும். அந்த அணி பெரிதும் நம்பியிருந்த நார்கியா சமீபத்தில் சொதப்பியிருப்பதால், அவரை அந்த அணி தக்கவைக்குமா தெரியவில்லை. இருந்தாலும் நிறைய நல்ல வெளிநாட்டு பௌலர்கள் இருக்கின்றனர். அது பிரச்னையாக இருக்காது. அதேசமயம் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களையும் டெல்லி நம்பி களமிறக்கியிருக்கிறது. முகேஷ் குமார், கலீல் அஹமது போன்றவர்கள் ஓரளவு அந்த அணியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். அவர்களை அந்த அணி மீண்டும் தக்கவைக்க முயற்சிக்கலாம்.

dc
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு சதவீதங்கள்!

ஒரு ஆல்ரவுண்டரை வாங்குவதில் கவனம் செலுத்தவேண்டும்:

டெல்லி கேபிடல்ஸுக்கு இருந்த இன்னொரு பிரச்னை டாப் ஆர்டரில் ஒரு பார்ட் டைம் பௌலர் இல்லாதது. மிட்செல் மார்ஷ் அடிக்கடி காயம் அடைந்ததால் அது பெரும் தலைவலியாகவே இருந்தது. அதனால், அந்த அணி நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டரை வாங்குவதில் கவனம் செலுத்தவேண்டும். முடிந்தால் முன்னாள் வீரர் ஸ்டாய்னிஸை குறிவைக்கலாம். ஆனால், அவர்மீது பல அணிகள் கண் வைத்திருப்பார்கள். அதனால், ஓரளவு குறைந்த தொகைக்கு செல்லக்கூடியவர்களை அவர்கள் குறிவைக்கலாம். அவர்கள் இந்திய வீரர்களாக இருந்தால் இன்னும் நல்லதுதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com